Irfan - ஆக்ஸிடெண்ட்ட பண்ணிட்டு இப்டி திங்குற - இர்ஃபானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்

சென்னை: Irfan (இர்ஃபான்) சில நாட்களுக்கு முன்பு யூட்யூபர் இர்ஃபான் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இர்ஃபான் என்பவர் நடத்திவரும் யூட்யூப் சேனல் இர்ஃபான்ஸ் வியூ. அவரது எளிமையான பேச்சும், தேடி தேடி வித விதமாக உணவை சாப்பிட்டு அதுகுறித்த தனது ஒப்பினியனை பகிரும் வீடியோக்களை அப்லோட் செய்ததால் வெகு சீக்கிரத்திலேயே பிரபலம் ஆனார் இர்ஃபான். கிட்டத்தட்ட 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை அவர் வைத்திருக்கிறார்.

Netizens Scolded Youtuber Irfan for his new video

பிரபலங்களுடன் இணைந்த இர்ஃபான்: உள்ளூரில் மட்டும் சாப்பிட்டு வீடியோவை அப்லோட் செய்துகொண்டிருந்த இர்ஃபான் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வெளிநாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். அங்கிருந்து அவர் அப்லோட் செய்த வீடியோக்களும் பிரபலமடைந்தன.நடிகர் நெப்போலியன் மகனுக்காக அமெரிக்கா சென்றதும் குறிப்பிடத்தக்கது.

தனது மகனுக்காக வந்ததால் அவருக்கு நெப்போலியன் பரிசையும் வழங்கினார். மேலும் தமிழ்நாட்டுக்குள் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் உணவு அருந்திக்கொண்டே பேட்டி எடுக்கும் இவரை பலரும் ரசிக்கின்றனர்.

இர்ஃபான் திருமணம்: தனது உறவுக்கார பெண்ணை பல ஆண்டுகள் காதலித்து வந்தார். கடந்த 14ஆம் தேதி அவரை திருமணமும் செய்துகொண்டார். அதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் வாழ்வின் காதலை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன். யாருக்காக என் இதயம் என் வாழ்நாளின் இறுதி வரை துடிக்குமோ, அவரைத் திருமணம் செய்துகொண்டேன்.

எனது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தேவை" என குறிப்பிட்டிருந்தார். அவரது திருமணத்தில் இர்ஃபானின் நண்பர்கள், உறவுக்காரர்கள், பல யூட்யூபர்கள் கலந்துகொண்டனர். மேலும் அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

கார் விபத்து: இந்தச் சூழலில் யூட்யூபர் இர்ஃபான் சென்ற கார் சில நாள்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது. மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது. மேலும் இந்த விபத்தின் காரணமாக ஒரு மூதாட்டி உயிரிழந்துவிட்டதாகவும்; காரை இர்ஃபானின் நண்பர் ஓட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. திருமணமான சில நாள்களிலேயே ஏற்பட்ட இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Netizens Scolded Youtuber Irfan for his new video

இர்ஃபானின் வீடியோ: இந்நிலையில் அவர் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார். அதில் வெளிநாட்டில் இருக்கும் அவர் சிப்பி உணவை உண்ணும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதனைப் பார்த்த நெட்டிசன்களில் சிலர், விபத்தை ஏற்படுத்தி ஒரு மூதாட்டியை கொன்றுவிட்டு இப்படி ஜாலியா சாப்பிட்டுட்டு இருக்க என காட்டமுடன் தெரிவித்துவருகின்றனர்.

மேலும், சிலர் அந்த மூதாட்டியின் குடும்பத்துக்கு ஒரு ஆறுதலாவது சொன்னீங்களா எனவும் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேசமயம், இந்த வீடியோ புதிய வீடியோவா இல்லை ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வீடியோவா என்பதை தெரியாமலேயே அவரை திட்டக்கூடாது என மற்றொரு தரப்பினரும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X