ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாதும்மா.. ஒத்த போட்டோவை போட்டு மொத்தமாய் வாங்கிக்கட்டும் லாஸ்லியா!

சென்னை: நடிகை லாஸ்லியா போஸ்ட் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கவினும் சாக்ஷியும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் சாக்ஷியை வெளியேற்றிவிட்டு கவினை காதலித்தார்.

அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் லாஸ்லியா தொடர்ந்து கவினை காதலித்து வருகிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது தன்னிடம் தந்தையை போன்று அன்பை காண்பித்த சேரனை அவர் சந்தேகப்பட்டார்.

கவினை நம்பிய லாஸ்லியா

கவினை நம்பிய லாஸ்லியா

மேலும் சேரினின் பாசமெல்லாம் டிராமா என்று கவின் கூறியதை நம்பிய லாஸ்லியா, சேரன் குறித்து கவின் தவறாக பேசியதையும் நம்பினார். கவினுடனான காதலால் மற்றவர்களின் பாசமும் அன்பும் லாஸ்லியாவுக்கு பொய்யாய் தெரிந்தது.

கடுப்பான பார்வையாளர்கள்

கடுப்பான பார்வையாளர்கள்

கவினுக்காக பெற்றோரின் பாசத்தையும் உதாசீனப்படுத்தி வருகிறார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியா மீது கடுப்பானார்கள் பார்வையாளர்கள்.

இன்ஸ்டாவில் போட்டோ

இன்ஸ்டாவில் போட்டோ

அன்று முதல் லாஸ்லியா என்ன பேசினாலும் அவரை கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் லாஸ்லியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அழகான போட்டோ

அழகான போட்டோ

அதில் நீண்ட் பிங்க் மற்றும் லைட் ப்ளு நிற நீண்ட கவுனில் ஃபிரி ஹேர் விட்டு கலக்கலாய் உள்ளார் லாஸ்லியா. இந்த போட்டோவில் லாஸ்லியா மிகவும் அழகாக உள்ளார்.

ஓவர் மேக்கப்..

ஆனால் இதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர். ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது என்றும் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளாலும் திட்டி தீர்த்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X