இது டான்ஸா.. இதெல்லாம் எங்க உருப்படப்போகுது.. நடிகையை துப்பாத குறையாக திட்டித்தீர்த்த நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: மீரா மிதுனின் டான்ஸ் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
நடிகை மீரா மிதுன் 2016ஆம் ஆண்டுக்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால் அவர் திருமணம் ஆனதை மறைத்து அழகிப் போட்டியில் பங்கேற்றதாகவும், வயது குறித்து தவறான தகவல்களை அளித்ததாகவும் புகார் எழுந்தது.
அதோடு இளம் பெண்களை வைத்து அழகிப் போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடி செய்ததாகவும் நடிகை மீரா மிதுன் மீது போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டன.

பெரும் சர்ச்சை
இதனை தொடர்ந்து மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்ப பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு. இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இந்த நிகழ்ச்சியிலும் சேரன் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டைக் கூறி பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

கவர்ச்சி போட்டோக்கள்
இதனால் கோபமடைந்த மக்கள் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டினர். இதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் பறிபோக, கவர்ச்சி காட்டினால் வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி டான்ஸ்
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது ஆண் நண்பர் ஒருவருடன் படு கவர்ச்சியாக டான்ஸ் ஆடியிருக்கிறார். அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் மீரா மிதுன். வளைந்து நெளிந்து பார்க்கவே அருவருப்பாக உள்ளது அவர்களின் ஆட்டம். இதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை துப்பாத குறையாக திட்டி தீர்த்திருக்கின்றனர்.

எங்கே உருப்பட போகுது?
இது பேரு டான்ஸா என கேட்டுள்ளனர் நெட்டிசன்கள். மேலும் வயசான காலத்துல பேரன் கூட இவ்ளோ கேவலமான டான்ஸ் ஆடுறீங்களே என்று கேட்டும் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். இப்படி ரூம்ல ஆடுறதுக்கு ரோட்டுல ஆடினாலும் காசு கிடைக்கும் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் இதெல்லாம் எங்கே உருப்பட போகுது என்றும் விளாசியிருக்கின்றனர்.

அவரு பார்க்கணும்
இன்னும் சிலர் இப்படி டான்ஸ் ஆடிட்டு சேரன் சார்க்கிட்ட சண்டை போட்டிங்களே.. சேரன் சார் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் உங்களின் உடம்பு ஒரு ஷேப்பே இல்லாமல் இருக்கிறது. ஏதாவது உடற்பயிற்சி செய்து ஒரு ஷேப்புக்கு வாங்க என்றும் அட்வைஸ் செய்திருக்கின்றனர். மீரா மிதுனின் இந்த கவர்ச்சி ஆட்டம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











