எப்போது நிர்வாணமாவார் பூனம் பாண்டே?-கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம்!

By Sudha

Poonam Pandey
டெல்லி: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி பூனம் பாண்டே சொன்னபடி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அவரை எங்கே என்று கேட்டு பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ரசிகர்கள் ஆர்வத்தோடு விவாதம் செய்து வருகின்றனர்.

உலகக் கோப்பையை இந்தியா வென்றால் நான் நிர்வாணமாக காட்சியளிக்கக் கூடத் தயார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் பூனம் பாண்டே. இதனால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. மேலும், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய அடுத்த சில விநாடிகளில் தான் அளித்த உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்தி, சொன்னதைச் செய்வேன் என்றும் கூறியிருந்தார் பூனம்.

இதனால் பரபரப்பு மேலும் கூடியது. இந்த நிலையில் நேற்று இந்தியா உலகக் கோப்பையை தட்டிச் சென்றதைத் தொடர்ந்து இணையதளங்களில் பூனம் பாண்டே குறித்த பேச்சுக்கள் சூடாக கிளம்பியுள்ளன.

பேஸ்புக்கில் ஒருவர், யாராவது பூனம் பாண்டேவைப் பார்த்தீங்களா என்று கேட்டிருந்தார். அதற்கு இன்னொருவர் அவரது அப்பாவைத் தான் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். காரணம், பூனம் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று கூறியதற்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்திருந்ததால்.

இருப்பினும் தான் அளித்த உறுதிமொழி குறித்து பூனம் இதுவரை வாய் திறக்கவில்லை. மாறாக அவர் இந்தியா வெற்றி பெற்ற பின்னர் அனுப்பிய ட்விட்டர் செய்தியில், கடைசியில் மாயாஜாலம் வென்று விட்டது. இந்தியாவின் வெற்றி அபாரமானது, வாவாவாவாவ்வ், வந்தே மாதரம் என்று மட்டும் கூறியிருந்தார் பூனம்.

இந்தியா வென்று விட்டது. பூனம் சொன்னபடி செய்வாரா என்பது இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் புதிய எதிர்பார்ப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X