கை நீளுதே பாலாஜிக்கு.. இது என்ன நியாயம்னு நீங்கதான் சொல்லணும் ஆண்டவரே.. நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கமலிடம் நியாயம் கேட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில், கால் டாஸ்க்கில் யார் சிறப்பாக செய்தது என்று ரேங்க் கொடுக்கும் டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.
இதில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க ஹவுஸ்மேட்ஸ் அடித்துக்கொள்ளாத குறையாக சண்டை போட்டு கொள்கின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என கேட்டு கழுவி ஊற்றியுள்ளனர்.
மண்டு பயில்வான்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடே மண்டு பயில்வான் நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட!... கம்னு வெளியே போயிரு! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
நீங்களும் உங்க டாஸ்க்கும்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதெல்லாம் ஒரு டாஸ்க்....இதில ஒன்னு இரண்டு இடங்களை தேர்ந்து எடுக்கனுமா? போங்கடா நீங்களும் உங்க டாஸ்க்கும் என்றும் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
பயில்வானுக்கு ரூல்ஸ் தெரியாது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானுக்கு!..டாஸ்க் ரூல்ஸ் தெரியாது!.. எப்படி விளையாடனும்னு தெரியாது!...யாரையும் மதிக்க தெரியாது!... கரடுமுரடா பேசவேண்டியது, கன்னா பின்னான்னு விளையாடவேண்டியது, ஆனா தான் மிகவும் அற்புதமா பர்ஃபாமன்ஸ் பண்ணியதாக அள்ளிவிட வேண்டியது.. என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.
இன்னைக்கு விருந்து இருக்கு
புரமோவில் யாருக்கு முதலிடம் என ஹவுஸ்மேட்ஸ் சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், போடு தகிட தகிட ஃபர்ஸ்ட பிளேஸ்க்கு நெருப்பு சண்டை.. இன்றைக்கு விருந்து இருக்கு என கூறியுள்ளார்.
வொர்ஸ்ட்டு பர்ஃபாமர்
பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் ரேங்க் கேட்கும் பாலாஜியை வெளுத்துள்ளார் இந்த நெட்டிசன். ஆரியை பேசவே விடாத பயில்வான்தான் ரொம்ப வொர்ஸ்ட்டு பர்ஃபாமர் என கூறியுள்ளார்.
பிட்டுப்பேப்பரு பயில்வான்
முதல் புரமோவில் டெலிபோன் டாஸ்க்ல தான்தான் சூப்பரா பண்ணியதாக ரீல் சுத்துவாரு இந்த பிட்டுபேப்பரு பயில்வான், வேணும்ன்னா அதை நீங்களே இன்று இரவு நிகழ்சியில பாருங்க என்றும் கூறியிருக்கிறார்
ராஜமாதா அடிபோடுறாங்க
அர்ச்சனாவும் முதல் இடத்தில் நின்றுக்கொண்டு போட்டி போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், ராஜமாதா நம்பர் ஒன் இடத்துக்கு அடி போடுறீங்களே.. மகிழ்மதி சட்டத்தில் இதற்கு ஏதேனும் தண்டனையுண்டா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
என்ன நியாயம் ஆண்டவரே
தனக்குதான் முதல் ரேங்க் வேண்டும் என்று கேட்டு பாலாஜி சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், கை நீளுதே பாலாஜிக்கு.. இது சரியா கமல்ஹாசன் ஆண்டவரே.. அவன் அப்படி சொல்லிட்டு இப்ப இவனே கை தூக்குனா என்ன நியாயம்னு நீங்களே சொல்லுங்க ஆண்டவரே என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











