எல்லோரையும் கதறவிடும் மொட்டை அங்கிள்.. டபுள் பேமென்ட் போல.. வனிதாலாம் பின்னாடி போக வேண்டியதுதான்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை பார்த்து மிரண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் ஃபிரி பாஸை பெற சுரேஷ் சக்கரவர்த்தி, நாமினேஷன் லிஸ்டில் உள்ளவர்களுடன் பேசியது லிவிங் ஏரியாவில் உள்ள டீவியில் மற்ற ஹவுஸ்மேட்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் மொட்டை அங்கிளான சுரேஷ் சக்கரவர்த்தி மீது கொலை காண்டில் உள்ளனர். அவரை ரவுண்டு கட்டி கன்னாபின்னாவென கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர்.

மற்றவர்களின் ஒரிஜினல் முகம்

மற்றவர்களின் ஒரிஜினல் முகம்

ஆனால் அதையெல்லாம் முடிந்து போன விஷயம் என ஈஸியாக கடந்து செல்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் இதனால் கடுப்பான சக ஹவுஸ்மேட்ஸ்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்கின்றனர். இதில் அவர்களின் ஒரிஜினல் முகம் தெரிய வருகிறது.

புள்ள பூச்சிகள்

புள்ள பூச்சிகள்

இந்நிலையில் மொத்த பேரையும் கதற விடும் சுரேஷ் சக்கரவர்த்தியை பார்த்த நெட்டிசன்கள் தலைவன் தாறுமாறு என புகழ்ந்து வருகின்றனர். ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் அவருடன் சுரேஷுடன் மல்லுக்கு நிற்பதை பார்த்த இந்த நெட்டிசன் மொதல்ல இந்த விஜய் டீவியின் புள்ள பூச்சிகளை தூக்கி வெளியே போடுங்கப்பா! என கூறியுள்ளார்.

எலிமினேசன் கிடையாது

எலிமினேசன் கிடையாது

பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற 15 பேரையும் ஒற்றை ஆளாக நின்று அசால்ட் செய்யும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், அய்யா.. மொட்டை! உனக்கு எலிமினேசனே கிடையாது! என கூறியுள்ளார்.

டிஆர்பி கிங்

டிஆர்பி கிங்

சுரேஷ் சக்கரவர்த்தி மற்றவர்களை கதற விடுவதை பார்த்த இந்த நெட்டிசன், வனிதா எல்லாம் போய் பின்னாடி நில்லுமா.. இனிமேல் எவனாச்சும் சுரேஷ் சக்கரவர்த்தியை வனிதா கூட கம்பர் பண்ணிங்கன்னா அவ்வளவுதான். யாரா இருந்தாலும் நம்ம சுரேஷ்க்கு பின்னாடி தான் இருப்பாங்க பிக்பாஸ் 4 தமிழோட டிஆர்பி கிங், புரமோ மன்னன் , மீம்ஸ் கிரியேட்டர்களின் கதாநாயகன்.. என பாராட்டியுள்ளார்.

பேசாமலேயே பங்கம்

பேசாமலேயே பங்கம்

மற்றொரு நெட்டிசனான இவர், வனிதா கூட நின்னும் பேசும்
ஒரு இரண்டு பாயிண்ட்டாவது கரெக்ட்டா பேசும்.. இவர் பேசாமலேயே பங்கம் செய்கிறார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அசத்துங்க மொட்ட

அசத்துங்க மொட்ட

இன்று வெளியான புரமோக்கள் அனைத்திலும் சுரேஷ் மையப் படுத்தப்பட்டிருந்ததை பார்த்த இந்த நெட்டிசன் பிக்பாஸ் வீட்டுல நம்ம மொட்டையன் இருக்கிறவரை புரமோவுக்கு பஞ்சமே இருக்காது.. போல.. நீ அசத்து மொட்ட என கூறியிருக்கிறார்.

கேவலமா இருக்குடா

கேவலமா இருக்குடா

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ... விஜய் டிவி புதுசா மியூசிக் சேனல் ஆரம்பிச்சிருக்கான்... சன்டிவி ல என்ன வேல பண்ணியோ அதே வேலைய இங்கயும் கண்டினியூ பண்ணு. பேசாம வெளிய வந்துரு. . அதான் உனக்கு செட் ஆகும். உன் ரியல் மூஞ்சி பாக்க ரொம்ப கேவலமா இருக்குடா என கூறியுள்ளார்.

ரொம்ப மொக்கயா போகும்

ரொம்ப மொக்கயா போகும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தப்பு யார் மேல தெரியல... ஆனா சுரேஷ் இல்லன்னா.. ரொம்ப மொக்கயா போகும் ப்ரோக்ராம்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மோதி விளையாடு

மோதி விளையாடு

தலைவா உனக்குதான் கப்பு... மோதி விளையாடு என சுரேஷ் சக்கரவர்த்தியை பாராட்டி தள்ளியிருக்கிறார் இந்த நெட்டிசன்,.

தில்லா நின்னு

தில்லா நின்னு

மொட்டைய நீங்க எத்தனை பேர் ரவுண்ட் கட்டினாலும் தில்லா நின்னு சமாளிக்க முடியும் மொட்டையால என புரமோவை பார்த்து விட்டு அவரது தில்லை பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பேர கெடுத்துக்கிட்டு

பேர கெடுத்துக்கிட்டு

சுரேஷ் சக்கரவர்த்தியிடம் ஓவர் ஆட்டிடியூட் காட்டும் ரியோவை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன். கடைசியில இந்த ரியோ தனக்கு இருக்குற நல்ல பெயர கெடுத்துட்டு தான் வெளிய போக போறான் போல என கூறியிருக்கிறார்.

ரத்தக்காயத்தோட..

ரத்தக்காயத்தோட..

பிக்பாஸின் புரமோக்களை பார்த்த இந்த நெட்டிசன்
ஆத்தி... இந்த பிக்பாஸ் சீசன்ல நிறைய போட்டியாளர்கள் ரத்த காயத்தோட வெளியே வரத பாக்கலாம் போலயே என கூறியுள்ளார்.

கதற விடுது..

கதற விடுது..

சுரேஷ் சக்கரவர்த்தி பண்ணும் அதகளத்தை பார்த்த நெட்டிசன்கள், மொட்டைக்கு டபுள் பேமண்ட்தான் நம்ப பிக்பாஸ் கொடுத்துயிருப்பாரு! அதனாலதான் இந்த மொட்ட .. எல்லோரையும் கதற விடுது! என கூறியுள்ளார்.

லவ் சீன் எப்போ வரும்?

லவ் சீன் எப்போ வரும்?

புரமோக்களில் சண்டைகள் மட்டுமே இருப்பதை பார்த்து அலுத்துப்போன இந்த நெட்டிசன், நீங்களும் சண்டை எவ்வளவு நாள்தான் போடுவிங்க.. யார்தான்பா டூயட் பாடறது!.. லவ் சீன பார்த்தாதான் சோறே இறங்கும்! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X