twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வனிதாவும் லட்சுமியும் உரையாடியபோது.. அந்த ஆங்கர் தம்பி.. அந்த பட கேரக்டரதான் ஞாபகப்படுத்தினாரு!

    |

    சென்னை: வனிதாவும் லக்ஷ்மியும் நேர்காணலில் உரையாடிய போது வனிதா அக்கா போட்ட அதட்டலில் அந்த ஆங்கர் தம்பி பீதியாகி மிரண்டுபோய் பார்த்ததை கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

    Recommended Video

    வீட்டு சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா

    நடிகை வனிதா தனியார் ஊடகத்தின் நேர்க்காணலில் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அநாகரிகமாக பேசிய வீடியோதான் நேற்று முதல்ஹாட் செய்தி.

    நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கண்டப்படி பேசினார் வனிதா. போடி வாடி என்றும் வயதுக்கு கூட மரியாதைக் கொடுக்காமல் அநாகரிகமாக பேசினார்.

    கொரோனா மிரட்டி விரட்டினாலும் தோழிகளுடன் ஜாலி ட்ரிப்.. அமெரிக்கா சென்றுள்ள பிரபல ஹீரோயின் அதகளம்! கொரோனா மிரட்டி விரட்டினாலும் தோழிகளுடன் ஜாலி ட்ரிப்.. அமெரிக்கா சென்றுள்ள பிரபல ஹீரோயின் அதகளம்!

    வனிதா அக்கா..

    வனிதா அக்கா..

    அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வனிதா அக்கா என்று எவ்வளவோ ஆசுவாசப்படுத்த முயன்றும் அடங்காத வனிதா உனக்கு என்னடி இங்க நொட்ற வேலை? ஒரு புருஷன் இருந்தா நீ என்ன பத்தினியா? நீ ஒழுங்கா என்று கேட்டும் திக்குமுக்காட வைத்தார்.

    மிரண்டு போன ஆங்கர்

    மிரண்டு போன ஆங்கர்

    வனிதா அக்கா, வனிதா மேடம் என எப்படியெல்லாமோ அந்த ஆங்கர் அழைத்தும், தம்பி நீ சும்மா இரு.. உன்னப்பத்தி எனக்கு தெரியும் என்று அவர் மீதும் பாய்ந்தார். வனிதா பாய்ந்த பாய்ச்சலில் மிரண்டு போன அந்த ஆங்கர் சகோ, திடீரென காணாமலே போய் விட்டார்.

    கிழிக்கிறேன்டி..

    கிழிக்கிறேன்டி..

    வனிதா பேசிய கேவலமான பேச்சை கேட்க முடியாத லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொடர்பை துண்டித்துவிட்டு சென்றார். ஆனால் வனிதா உன்னை கிழிக்க தான் வந்துள்ளேன், இந்த வீடியோவை ரெக்கார்டு செய்து போட்டு உன்னை கிழிக்கிறேன்டி என்று அசிங்கமாக பேசினார்.

    அநாகரிகத்தின் உச்சம்

    அநாகரிகத்தின் உச்சம்

    செருப்பு பிஞ்சிடும் நாயே என்றும் அநாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றார். லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் கணவரையும் விட்டு வைக்காமல் வெட்கம் கெட்டவன், கேடு கெட்டவன் என்றும் திட்டி தீர்த்தார். இதனால் நேற்று முழுக்க ட்ரென்டிங்கில் இருந்தார் வனிதா.

    ஆடிப்போன ஆங்கர்

    இதனை தொடர்ந்து வனிதா தொடர்பான செய்திகளை இனிமேல் போட போவதில்லை என முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அந்த ஊடகம்.
    இந்நிலையில் வனிதா, பேசிய பேச்சைக் கேட்டு அந்த ஆங்கர் ஆடிப்போன காட்சிகளை வைத்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

    பறக்கும் மீம்ஸ்

    குறிப்பாக ராஜா ராணி படத்தில் ஏர்வாய்ஸ் சூர்யா என கஸ்டமர் கேர் ஆஃபிசராக வரும் நடிகர் ஜெய்யை, நயன்தாரா கிழித்துவிடும் காட்சியுடன் ஒப்பிட்டு மீம்ஸ் வெளிட்டுள்ளனர். இதோபோல் ஆங்கரின் ரியாக்ஷனை கிண்டலடித்து பல மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.

    English summary
    Netizens shares lots of Memes of the Vanitha interview Anchor. Vanitha slammed Lakshmi Ramakirshnan in the Video call interview. The anchor was afraid after seeing Vanitha speech.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X