தீயா இருக்கு.. ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பு.. வேற லெவல்.. சக்கரா டிவிட்டர் ரிவ்வியூ!

சென்னை: விஷாலின் சக்ரா படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் குறித்த கருத்துக்களை நெட்டிசன்கள் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஷால் நடித்துள்ள 'சக்ரா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் விஷால்.

எம்.எஸ்.நந்தன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷால் பிலிம் ஃபேக்டரி

விஷால் பிலிம் ஃபேக்டரி

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சக்ரா திரைப்படத்தை தயாரித்துள்ளது. இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிப்பு வேற லெவல்

நடிப்பு வேற லெவல்

அதன்படி பாஸிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகிறது சக்ரா திரைப்படம். படம் ஆக்ஷன் விருந்தாக உள்ளது என்றும் விஷால் மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோரின் நடிப்பு வேற லெவலில் உள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

நல்ல நடிப்பு

நல்ல நடிப்பு

சக்ரா படத்தை பார்த்த இந்த நெட்டிசன், சக்ரா படத்தில் ரெஜினாவின் இந்த சிரித்த முகம் கிடையாது. அது வேறு முகம். நல்ல நடிப்பு. நல்ல கேரக்டர். லீலா என்ற அந்த கேரக்டர் தமிழ் சினிமாவுக்கும் புதுசு.. என்று பதிவிட்டுள்ளார்.

தரமான விருந்து

தரமான விருந்து

சக்ரா விமர்சனம்.. முதல் பாதி குட் என்றும் இரண்டாவது பாதி ரேஸி என்றும் கூறியுள்ள இந்த நெட்டிசன், யுவன் பின்னணி இசை ராக்ஸ்.. இரும்புத்திரை அளவுக்கு எதிர்பார்த்து போனா டிஸ்அப்பாயிண்மெண்ட் ஆகலாம். ஆனால் சைபர் க்ரைம் த்ரில்லர் ஃபேன்ஸுக்கு தரமான விருந்து என்று குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

யுவன் சிறப்பு

யுவன் சிறப்பு

மற்றொரு ரசிகரான இவர், நான் பிரிடிக்ட் பண்ணியது போலவே சக்ரா இரும்புத்திரை அளவுக்கு இல்லை.. யுவன் அவருடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இது எப்படி நீடிக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மாஸி ஓபனிங்

மாஸி ஓபனிங்

விறுவிறுப்பான சைபர் ஆக்ஷன் படம் அற்புதமான முதல் பாதி. வழக்கமான காட்சிகளுடன் இரண்டாம் பாதி.. ராணுவம் மற்றும் போலீஸுக்கு விஷால் பொருத்தமாக இருக்கிறார். மாஸி ஓபனிங் சீன் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ரெஜினா பிரிலியன்ட்

ரெஜினா பிரிலியன்ட்

என்ன ஒரு சேஞ்ச் ஓவர் ரெஜினா கெஸன்ட்ரா.. அவர் பிரிலியன்ட்.. சக்ரா படத்தை பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தீயா இருக்கு..

தீயா இருக்கு..

சக்ரா படத்தை பார்த்த இந்த நெட்டிசன், முதல் பாதி சூப்பர்.. இன்டர்வெல் சீன் தீயா இருக்கு என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X