இதோ ஆரம்பிச்சிட்டாங்கப்பா! யம்மா.. கருப்புதாம்மா நமக்கு பாதுகாப்பு! கதறடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் புரமோவில் அனிதா சம்பத் கண்ணீர்விட்டு அழுததை பார்த்த நெட்டிசன்கள் இப்போவே ஆரம்பித்து விட்டீர்களா என விளாச தொடங்கியுள்ளனர்.

Recommended Video

கண்ணீர்விட்ட Anitha Sampath | Emotional moment | Promo 1

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோவில் அனிதா சம்பத் தனது அம்மா குறித்து உருக்கமாக பேசி கதறியுள்ளார்.

நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக நிஷாவுக்கு ஹார்ட் கொடுக்கும் அனிதா, தன்னுடைய அம்மாவும் கறுப்புதான் என சென்டிமென்ட்டாக பேசுகிறார்.

ஆரம்பிச்சுட்டீங்க..

ஆரம்பிச்சுட்டீங்க..

இதனை பார்த்த நெட்டிசன்கள் அனிதா சம்பத் அழுது அனுதாபத்தை சம்பாதிக்க பார்க்கிறார் என விமர்சித்துள்ளனர். பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன அனிதா இப்பவே உன் நடிப்பை பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்து விட்டாய் போல.. என கேட்டுள்ளார்.

டிஆர்பி ஏரும்

டிஆர்பி ஏரும்

மற்றொரு நெட்டிசனான இவர் பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கம் குடும்பத்தோடு போடும் பிளானை வைத்து, என்ன டயலாக் தந்தாலும் சரி, எல்லாரும் ஒன்னா சொல்லிக் கொடுத்த மாதிரி ஒரே மாதிரி கண் கலங்கனும் புரிஞ்சுதா, ஏன்னா அப்பதான் டிஆர்பி ஏரும்.. என கலாய்த்துள்ளார்.

ஆரம்பிச்சுட்டாங்கப்பா..

ஆரம்பிச்சுட்டாங்கப்பா..

பிக்பாஸ் புரமோவில் அனிதா சம்பத் கதறி அழுததை பார்த்த இந்த நெட்டிசன், இதோ ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. யம்மா.. கருப்புதாம்மா நமக்கு பாதுகாப்பு.. என அனிதா சம்பத்துக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.

அப்புறம் ஏன் இப்படி?

அப்புறம் ஏன் இப்படி?

அனிதா சம்பத் தனது அம்மா கறுப்பு என்பதால் தாழ்வு மனப்பான்மை இருப்பதாக கூறி கதறி அழுததை பார்த்த இந்த நெட்டிசன், கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு பாட்டே இருக்கே!...அப்புறம் ஏன் இப்படி! என கேட்டுள்ளார்.

கலகம் மூட்ட பாக்குறீயே

கலகம் மூட்ட பாக்குறீயே

மற்றொரு நெட்சனான இவர், இந்த புரமோவுக்காக பிக்பாஸையே மிரட்டியுள்ளார். யோவ் பிக்பாசு.. இப்படி கருப்பு சிகப்பை வச்சு கலகம் மூட்ட பார்க்கிறீயே.. இது உனக்கே நியாயமாய்யா என கேட்டுள்ளார்.

அக்கா குறைச்சுக்கணும்

அக்கா குறைச்சுக்கணும்

மற்றொரு நெட்டிசனான இவர், இன்னும் நிறத்த வச்சு தகுதி தீர்மானிக்கும் எண்ணம் மக்கள்கிட்ட இருக்கு! வெள்ளக்காரன வெளுக்கனும் அவனுங்க பண்ண வேல! என்னம்மா நிஷாவ அழவச்சுறுவீங்க போல! ஆனா அக்காவே கொஞ்சம் குறைச்சுக்கலாம் தன் நிறத்த கிண்டல் பண்றத.. என நிஷாவுக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.

நேற்றைய எபிசோட்

நேற்றைய எபிசோட்

இன்னைக்கும் இதே கதைதான் ரொம்ப லென்த்தா போகும் போல! என நேற்றைய எபிசோடில் கொடுக்கப்பட்ட ஹார்ட் மற்றும் புரோக்கன் ஹார்ட் டாஸ்க்கை கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X