கவின் அண்ணே! நாங்க போட்ட ஓட்டுக்கு 5லட்சம் பத்தாதே! நக்கலடிக்கும் ஹேட்டர்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் காதல் கடலை என்றிருந்தவர் கவின். டாஸ்க்கை கூட சரியாக செய்யாத இவரை இன்னும் ஏன் பிக்பாஸும் விஜய் டிவியும் காப்பாற்றுகிறது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஆட்களை குறைக்க முடிவு செய்த பிக்பாஸ் கடந்த சீசன்களை போல 5 லட்சம் ரூபாய் பணத்தை விருப்பமுள்ளவர்கள் இன்றே பணத்துடன் வெளியே செல்லலாம் என்றார்.

வெளியேறிய கவின்
இதனைக் கேட்ட பணத்தை எடுக்கப்போவது போல் எழுந்து நின்றார். அப்போது சாண்டியும் லாஸ்லியாவும் என்ன செய்கிறாய் என தடுத்தது புரமோவில் தெரியவந்தது. பின்னர் கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியானது.

ஹேஷ்டேக்
இதனை பார்த்த நெட்டிசன்களும் ஹேட்டர்களும் ரகளை செய்து வருகின்றனர். மேலும் கவின் ஆர்மிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று #RIPKavinPaidArmy இப்படியொரு ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
வேலை முடிந்தது
ஆழ்ந்த அனுதாபங்கள் கவின் பேய்டு ஆர்மி.. ரெஸ்ட் எடுங்க நண்பர்களே.. வேலை முடிந்தது.. என்கிறார் இந்த நெட்டிசன்.
போட்ட கணக்கு என்ன?
ஆடிய ஆட்டம் என்ன?? போட்ட கணக்கு என்ன?? எல்லாம் 5 லட்சம் ரூபாய்க்கா?? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
உன்னை அறுக்கிறது
நீ விதைத்த வினை இன்று உன்னை அறுக்கிறது.. என்கிறார் இந்த நெட்டிசன்.
அனுபவி
சேரன் சார் பற்றி பேசிய பேச்சு என்ன?? அனுபவி ராஜா அனுபவி என்று கூறுகிறார் இவர்.
5 லட்சம் பத்தாதே
கவின் அண்ணே! நாங்க போட்ட ஓட்டுக்கு 5 லட்சம் பத்தாதே! என நக்கலடிக்கிறார் இவர்.
இன்று முதல் பார்க்கலாம்
சேரன் சார் போனதில் இருந்து பிக்பாஸ் பார்க்காமல் இருந்தவர்கள் இன்று முதல் பார்க்கலாம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











