நல்ல குணமான பொண்ணு வேணும்.. கொரோனா வந்து குணமான பொண்ணு இருக்கு வேணுமா? நெட்டிசன்ஸ் வேறலெவல்!
சென்னை: கொரோனா வைரஸால் மக்கள் பெரும் பீதியில் உள்ள நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் கொரோனாவையே வச்சு செய்திருக்கின்றனர்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்
கொரோனாவால் நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். ஆனால் மீம்ஸ் கிரயேட்டர்கள் மட்டும் அடங்குவதாய் இல்லை. கொரோனாவையே வச்சு செய்து வருகின்றனர்.

சலூன் ஷாப்ஸ்
இந்த மீம் சலூன் ஷாப்ஸ் மூடப்பட்டிருப்பதை குறிக்கும் வகையில் இந்த மீம் உள்ளது. ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் முடி வெட்ட முடியாமல் ஆண்கள் படும் கஷ்டத்தை சொல்லும் வகையில் உள்ளது இந்த மீம். நானெல்லாம் மூணு வாரத்துக்கு ஒருவாட்டி முடி வெட்டுறவன்டா.. என்ன போய் ரெண்டு மாசமா... போடா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேடிக்கை பார்க்கும்
பொது மருத்துவர்கள் உயிரை பணயம் வைத்து கொரோனாவுக்காக பணியாற்றி வரும் நிலையில்
கொரோனா சிகிச்சையின் போது பல் டாக்டர்கள் மட்டும் ஒய்யாரமாக படுத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக உள்ளது இந்த மீம். அனைவரும் மாஸ்க் அணிந்துள்ள நிலையில் பல் மருத்துவர்கள் தப்பித்துள்ளார்கள்

ஆண்களுக்கு ஒயின் ஷாப்
லாக் டவுனுக்கு பிறகு ஆண்களும் பெண்களும் எந்த வேலையில் அதிகம் கவனம் செலுத்துவார்கள் என்பது குறித்து பேசுகிறது இந்த மீம். அதாவது பெண்கள் பியூட்டி பார்லரில் மேக்கப் போடுவதிலும் ஆண்கள் ஓய்ன் ஷாப்பில் சரக்கடிப்பதிலும் ஆர்வம் காட்டுவதாக உள்ளது இந்த மீம்.

கொரோனா குணமான..
குணமான பொண்ணா வேணுமா? காலரா வந்து குணமான பொண்ணு, டைபாய்டு வநுது குணமான பொண்ணு, லேட்டஸ்டா கொரோனா வந்து குணமான பொண்ணு இருக்கு எது வேணும்... என கேட்டு கொரோனாவை இதுக்கும் இழுத்துள்ளனர் நெட்டிசன்கள்.

கதை காலி..
ஊரடங்கு முடியறதுக்குள்ள கல்யாணத்த முடிச்சிடனும்.. கடை திறந்துட்டா நம்ம கதை காலி என டாஸ்மாக்கையும் ஊரடங்கையும் கலந்துவிட்டு அடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

பாஸிட்டிவ்
2020ஆம் ஆண்டில் ரொம்பவே நெகட்டிவான வார்த்தை என்றால் அது ' பாஸிட்டிவ்' தான். என வினு சக்கரவர்த்தி தனது காதுகளை பொத்திக்கொள்வது போல் உள்ளது இந்த மீம்.

எதிர்பார்த்தது..
ரேபிட் டெஸ்ட் கிட்டை குறிப்பிட்டு எதிர்பார்த்தது கமல்ஹாசன் நடனம்.. ஆனால் நடந்தது பவர் ஸ்டார் டான்ஸ் என ரேபிட் டெஸ்ட்டை நாசம் செய்துள்ளனர் மீம் கிரியேட்டர்ஸ்.


Click it and Unblock the Notifications











