வலிமை, மாநாடு.. இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை கவனித்தீர்களா!

சென்னை : வெங்கட்பிரபுவின் வித்தியாசமான இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு

நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக வலிமை படத்தில் மிரட்டி இருந்தார்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை மற்றும் மாநாடு இரண்டும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டைம் லூப் பாணியில்

டைம் லூப் பாணியில்

கலர்ஃபுல்லான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் இயக்குனர் வெங்கட்பிரபு. மாநாடு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. டைம் லூப் பாணியில் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு செம ஸ்டைலிஷாக நடித்திருந்தார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்திருப்பார். எஸ் ஜே சூர்யா வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் மிரட்டியிருப்பார். காட்சிக்கு காட்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியான மாநாடு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது மாநாடு தெலுங்கிலும் ரீமேக் செய்ய முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது .

ஆரவாரமாக கொண்டாடப்பட்டது

ஆரவாரமாக கொண்டாடப்பட்டது

நடிகர் அஜித்திற்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவருடன் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து இப்பொழுது ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நேர்கொண்டபார்வை படத்தில் முதன்முறையாக இணைந்த அஜித் ஹெச் வினோத் கூட்டணி அதைத் தொடர்ந்து வலிமை படத்திலும் இணைந்தது. கடந்த 2 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இந்த படம் சமீபத்தில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது.

தேதி தள்ளி வைக்கப்பட்டது

தேதி தள்ளி வைக்கப்பட்டது

இந்த நிலையில் வலிமை படத்திற்கும் மாநாடு படத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது மாநாடு படம் முதலில் தீபாவளி பண்டிகைக்கு தான் ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது. பின் சில காரணங்களால் நவம்பர் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது.

Recommended Video

பாசிட்டிவ் டு நெகட்டிவ்.. வலிமை படத்தை பற்றிய டாப் 5 பீட்ஸ்.. பிகே வீடியோ இதோ!
இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை

இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை

இதேபோலத்தான் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது பின் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் அறிவிக்கப்பட்டதால் பிப்ரவரி 24ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மாநாடு மற்றும் வலிமை என இரண்டு படங்களும் பண்டிகை தினத்தில் வெளியாக இருந்து பின் இரண்டும் தள்ளி வைக்கப்பட்டு இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. இரண்டு படங்களும் பண்டிகையை அல்லாத நாட்களில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களில் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X