இந்த பயில்வான் பாலாவுக்கு என்ன வேணுமாம்? பிக்பாஸ் புரமோவை பார்த்து துள்ளிக்குதிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ பார்த்த நெட்டிசன்கள், என்னங்கடா நடக்குது என நொந்துபோயுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுக்கும் கேப்ரியல்லாவுக்கும் இடையே காதல் வருவதை போன்று மூன்றாவது புரமோவில் காட்டியுள்ளார்கள்.
இருவரும் உரிமையோடு பேசிக் கொள்வதாகவும் டபுள் மீனிங்கில் பேசிக்கொள்வதாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், என்னய்யா பிக்பாஸ் உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா என கேட்டுள்ளனர்.

ஆள்களை உசுப்பி விடுகிறாரு!
மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸ் ஜாலி மூடுல இருக்காரு போல!... அதான் ரொமான்ஸ் பாட்டை போட்டுவிட்டு... ஆள்களை உசுப்பி விடுகிறாரு! என கூறியுள்ளார்.

என்னா பிக்பாஸ்
மற்றொரு நெட்டிசனான இவர், என்னா பிக்பாஸ் உன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டியே என கேட்டுள்ளார்.

என்ன வேணுமாம்?
பாலாஜி, கேப்ரியல்லாவின் காதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா இப்ப பயில்வான் பாலாவுக்கு என்ன வேணுமாம்? என கேட்டுள்ளார்.

ஏதோ சொல்ல வர்ற மாதிரி
மற்றொரு நெட்டிசனான இவர், என்னைய்யா பிக்பாஸ்... இந்த பாட்டை பின்னாடி ஓடவிட்டு ஏதோ சொல்ல வர்ற மாதிரி தெரியுது!.. என்ன விஷயம் என கேட்டுள்ளார்.

இவ்வளவு ஆகாதய்யா..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பெரியபாசு!... ஆனாலும் உனக்கு இவ்வளவு ஆகாதய்யா என கூறியுள்ளார்.

மறந்து போய்றானுங்களே..
மற்றொரு நெட்டிசனான இவர், புரமோவை பார்த்துவிட்டு இவனுங்கள உள்ள எதுக்கு அனுப்பினோம்றத அடிக்கடி இப்படி மறந்து போய்றானுங்களே என குறிப்பிட்டுள்ளார்.

போய்யா அந்தப்பக்கம்
பிக்பாஸின் இந்த மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸை பார்த்து உன் வேலை என்னான்னு எனக்கு தெரியும் போய்யா அந்தபக்கம்!.. மொதல்ல பாட்ட நிப்பாட்டு! என காட்டமாக கூறியுள்ளார்.

உனக்கு வேண்டாத வேலை
அடேய் பாலாஜி முருகதாஸ் இப்பதான் உன் மேல கொஞ்சம் நல்ல அபிப்ராயம் வர ஆரம்பிச்சு அதுக்குள்ள எதுக்குடா இந்த வேண்டாத வேலை இந்த விஜய் டிவி கன்டென்ட் இல்லைனா இந்த மாதிரி எச்சை வேலை பாக்க ஆரம்பிச்சிடுறானுங்க.
கேப்ரில்லா இது உனக்கு வேண்டாத வேலை என எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஜோடி தான் கிடைச்சதா?
மற்றொரு நெட்டிசனான இவர், டேய் பிக்பாஸ் ஷோ எடிட்டர் உனக்கு பிரமோஷன் போட இந்த ஜோடி தான் கிடைச்சதா? என கேட்டுள்ளார்.

கோர்த்து விட்ராத
புரமோவை இந்த நெட்டிசன், பிக்பாஸ் யாரை யாருக்கு வேணும்லானும் கோத்து விடு. ஆனால் எங்க தலைவி கேப்ரில்லா மட்டும் யாரோடும் கோர்த்து விட்ராத. அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன் என கூறியிருக்கிறார்.

ஒன்னுமே இருக்காது..
மற்றொரு நெட்டிசனான இவர் என்னடா இன்னும் லவ் ஸ்கிரிப்ட் வரலயே பார்த்தேன்.. ம்.. வந்துடுச்சு என்னட்விஸ்ட் இது? பாலாஜிக்கும் கேபிக்கும் லவ்வா. யாரோ யாருக்குள் இங்கு யாரோ.. எப்படியும் இங்க துளிர்க்கிற காதல் நிச்சயம் வெளிய போய்ட்டா ஒன்னுமே இருக்காது..! என்னமோ நடத்துங்க நடத்துங்க..! என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











