உள்ளாட்சி தேர்தலே நடத்தலயாம்.. கை கழுவுறதுக்கு தண்ணி இல்லயாம்.. இதுல இவுக வேற! நெட்டிசன்ஸ் ரகளை!

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுவாமி சங்கர்தாஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் தேர்தல் ரத்து குறித்து நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் எந்த கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..

சீட்டீ அடிச்சுகிட்டு இருந்தானாம்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து - ஊடகங்கள்
"ஊரு கெடக்குற கெடையில, ஓவாயன் சீட்டீ அடிச்சிகிட்டு இருந்தானாம்"

ஆணியே பிடுங்கவேண்டாம் மொமன்ட்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து
#தட் ஆணியே பிடுங்கவேண்டாம் மொமன்ட்

ஊரையே நாறடிக்கிறார்கள்

இயக்குநர்கள் சங்கம் போல நடிகர் சங்கத்திலும் உறுப்பினர்களே தலைவரைத் தேர்வு செய்யும் நடைமுறையைக் கொண்டுவரவேண்டும். நடிகர் சங்கத் தேர்தல் என்கிற பெயரில் 2, 3 ஆண்டுகளுக்கொருமுறை ஊரையே நாறடிக்கிறார்கள் இந்த நடிகர்கள்!

அவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

ஒரு நாட்டின் தேர்தல் அளவுக்கு முக்கியத்துவம் நடிகர் சங்கத் தேர்தலுக்கு வழங்கப்படுவது ஏன்?

இது ஒரு பிரச்சனைன்னு..

2 வருஷமா உள்ளாட்சித் தேர்தல் நடத்தல! இன்னைக்கு வந்து நடிகர் சங்கத் தேர்தல நடத்துனா? பிண்ணாடிபே !!!
நாட்ல அவ அவ தண்ணியில்லாம கை-கழுவுவதுக்கு கூட கஷ்டப்படுறான்க, இது ஒரு பிரச்சனைன்னு துக்கிட்டு வரான்க... த ச்சக பே...!!!

தமிழக அரசு அதிரடி

நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்
குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
#வாழ்க_ஜனநாயகம்..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X