இருக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கு.. பிக்பாஸில் நடிகையை பார்த்து பீதியடையும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் குறித்து நெட்டிசன்கள் சூடாக கருத்துக்களை டிவிட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று முதல் மீண்டும் ஒளிப்பரப்பாகிறது. இதில் எட்டாவது போட்டியாளராக நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். நடிகை வனிதா, நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். இவர் தமிழில் நடிகர் விஜயுடன் சந்திரலேக்கா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அடிக்கடி தந்தை விஜயகுமாருடன் தகராறு என செய்தியில் அதிகம் பேசப்படுவார். அண்மையில் வீட்டுத் தகராறை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களுடன் நைட்டியில் இவர் நடுத்தெருவில் நின்று சண்டை போட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வனிதா இடம்பெற்றிருப்பது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில...
இந்த பிக்பாஸோட மும்தாஜ்
இந்த பிக்பாஸோட மும்தாஜ்.. வனிதாதான் என கூறுகிறார் இந்த நெட்டிசன்
காயத்ரி பார்ட் 2
காயத்ரி பார்ட் 2... என முதல் சீசனில் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டு சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராமை நினைவு படுத்தியுள்ளார் இந்த நெட்டிசன்
பிராப்ளம் ஸ்டார்ட்ஸ்
அய்யோ பிராப்ளம் இப்பவே ஸ்டார்ட் ஆகப்போகுது.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்
பிக்பாஸ் வில்லி
பிக்பாஸ் வில்லி.. என இப்போதே கூறிவிட்டார் இந்த நெட்டிசன்
காயத்ரி ரகுராம் போல
இந்த சீசனோட காயத்ரி ரகுராம் போல... என கூறுகிறார் இந்த நெட்டிசன்
பிக்பாஸ் வீட்டில் சவால்கள்
பிக்பாஸ் வீட்டில் சினிமா தம்பதிகளுக்கு மகளாக பிறந்த வனிதா விஜயகுமார் 8வது ஆளாக உள்ளே வந்து விட்டார். ஒரு வேளை முதல் பிக்பாஸ் வீட்டில் இருந்த காயத்ரி ரகுராம் போல் இருப்பார் என்று நம்புகிறேன். கடுமையான சவால்கள் பிக் பாஸ் வீட்டில் காத்திருக்கின்றன. வாழ்த்துக்கள் வெற்றி பெற. என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
குழந்தை பார்சல்
ரிக்ஷா மாமா குழந்தை நட்சத்திரமா இது? முதல் கொஞ்ச வாரத்துலேயே குழந்தைய பார்சல் பண்ணிருவாங்கன்னு நினைக்கிறேன்! என்கிறார் இந்த நெட்டிசன்.
நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கு
இருக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கு.. என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











