பிக்பாஸ்3.. ப்ரமோ செம டெரரா இருக்கு.. ஃபாத்திமா பாபுக்கும் சேரனுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியாகியுள்ள ப்ரமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் விஜய் டிவியில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு, இயக்குநர் சேரன், நடிகர் சரவணன் என 15 போட்டியாள்ரகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகி வருகிறது. இதன் மூன்றாவது ப்ரமோவில் பிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என கூறுகிறார் பிக்பாஸ்.

அட்வைஸ் செய்யும் ஃபாத்திமா

அட்வைஸ் செய்யும் ஃபாத்திமா

இதனைக் கேட்டு சேரன் உட்பட அனைத்து போட்டியாளர்களும் கைத்தட்டுகின்றனர். அப்போது குறுக்கிடும் ஃபாத்திமா பாபு, தண்ணீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டது அவலம், கைத்தட்ட வேண்டிய விஷயம் அல்ல என அட்வைஸ் செய்கிறார்.

இது தேவையா?

இது தேவையா?

உடனே அதற்கு பதிலளிக்கும் சேரன், லிமிட்டேஷன் கொண்டு வந்ததற்காக கை தட்டுகிறோம் என்று ஃபாத்திமாவுக்கு பதிலடி கொடுக்கிறார். இப்படியாக முடிகிறது ப்ரமோ. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொஞ்சம் சும்மா இரும்மா

ஃபாத்திமா கொஞ்சம் சும்மா இரும்மா.. என்கிறார் இந்த நெட்டிசன்

முரட்டு லீடர்

பள்ளிக்கூடத்துல என் கிளாஸ்ல இருந்த முரட்டு லீடர ஞாபகப்படுத்துறாங்க ஃபாத்திமா பாபு என்கிறார் இந்த நெட்டிசன்

டெரரா இருக்கு

ப்ரமோ செம டெரரா இருக்கு.. ஆனா முழு வீடியோவும் பார்த்தாதான் தெரியும் எவ்வளோ மொக்கையா இருக்குன்னு.. பார்க்கலாம்.. என்கிறார் இந்த நெட்டிசன்

சண்டை ஆரம்பம் ஆயிடுச்சு

ஃபாத்திமா பாபுக்கும் சேரனுக்கும் சண்டை ஆரம்பம் ஆயிடுச்சு...

நாட்டாம பண்றாங்க

இந்த தாய் கிழவி என்ன எல்லாத்துக்கும் நாட்டாம பண்ணுது... என்கிறார் இந்த நெட்டிசன்

பேச்சுக்கும் மீட்டர்

ஹலோ பெரியபாசா! அப்படியே அவங்க பேசுற பேச்சுக்கும் மீட்டர் பொருத்துங்கோ பெரியபாசு! என்கிறது இந்த மீம்

சேரன் விடமாட்டார்

பாத்திமா ஆரம்பிச்சிடாங்க சேரன் சார் விடமாட்டார்.. என்கிறார் இந்த நெட்டிசன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X