அப்பா இறந்து 3 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி ஒரு போட்டோவா.. பாலாஜியை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பாலாஜி முருகதாஸ் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அதிகம் நெகட்டிவ் ரீச் ஆனவர்.

அடிக்கடி ஆரியுடன் தகராறு, சனம் ஷெட்டியுடன் பிரச்சனை என ஒரு ரகமாக விளையாடி வந்தார் பாலாஜி. பாலாஜியால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரின் பிபி எகிறியது.

பாலாஜி ரன்னர் அப்

பாலாஜி ரன்னர் அப்

இந்நிலையில் ஃபினாலேவில் ஆரி டைட்டில் வின்னராகி ட்ரோஃபியை கைப்பற்றினார். பாலாஜி இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சமூக வலைதளங்களில் பாலாஜியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடியது.

பாலாஜி தந்தை மரணம்

பாலாஜி தந்தை மரணம்

தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களிடம் பேசி வருகிறார் பாலாஜி. இதேபோல் தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலாஜியின் தந்தை முருகதாஸ் உடல் நலக்குறைவால் திடீரென காலமானார்.

போட்டோவால் ஷாக்

போட்டோவால் ஷாக்

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலாஜிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறினர். அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மொய்க்கும் இளம் பெண்கள்

அதாவது பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இளம் பெண்கள் பலர் அவரை சுற்றி மொய்த்து ரெட் ரோஸ்களை கொடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு வாழ்க்கையில எவ்ளோ பிரச்சனைகள் வந்தாலும் யாரு என்ன சொன்னாலும் அதற்கு தீர்வு சரி வச்சிகோங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.. எல்லோருடைய அன்புக்கும் நன்றி நான் நன்றாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

எப்படி இப்படியெல்லாம்?

எப்படி இப்படியெல்லாம்?

இதனை பார்த்த பலரும் நான் இருக்க வேண்டிய இடம் என்றும், நல்லா என்ஜாய் பண்ணுகிறீர்கள் என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் அப்பா இறந்து 3 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் எப்படி இப்படியெல்லாம் போட்டோ போஸ்ட் பண்ண தோன்றுகிறது என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X