உங்கள் வலி புரிகிறது.. விபத்துகள் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.. ஷங்கரை தேற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: அந்த கிரேன் என் மீது விழுந்திருக்கலாம் என உருக்கமாக பேசியிருக்கும் ஷங்கருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Recommended Video
சென்னை நசரத் பேட்டை அருகே ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் லைட்டுகள் கட்டப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கைகாவுக்கு கோரிக்கை
இதுதொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்து நடந்த மறு நாளே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் கமல் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்தார். இதேபோல் லைகா நிறுவனமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. படப்பிடிப்பில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கமல் லைகா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஷங்கர் டிவிட்
விபத்து நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் இந்தியன் 2 படத்தின் இயக்குநரான ஷங்கர் விபத்து குறித்து டிவிட்டியிருக்கிறார். இதுதொடர்பான தனது டிவிட்டில் பெரும் வலியோடு இதை எழுதுகிறேன். அந்த சம்பவத்தில் இருந்து நான் பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன், என்னுடைய உதவி இயக்குநரையும் குழுவினரையும் இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

என்மேல விழுந்திருக்கலாம்
கிரேன் விழுத்ததில் இருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறேன். அந்த கிரேன் என் மீது விழுந்திருந்தால் சந்தோஷபட்டிருப்பேன். அந்த குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள் என கூறியிருந்தார். ஷங்கரின் இந்த டிவிட்டை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
அப்பாற்பட்டது
அவரது டிவிட்டுக்கு பதில் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், உங்கள் வலி எங்கள் எல்லோருக்கும் புரிகிறது சார். விபத்துகள் நடக்கும் அது உங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. இந்த கட்டத்திலிருந்து விரைவாக நீங்கள் மீண்டு வரவேண்டும். விரைவில் நீங்கள் மீண்டும் பணிக்கு வருவதை எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களையும் உங்களுடை குழுவினரையும் ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார்.
மறைத்து வையுங்கள்
ஷங்கரின் டிவிட்டை பார்த்த இந்த ரசிகர், உங்கள் வலி எங்களுக்குப் புரிகிறது சங்கர் சார்....அவர்களுடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றுதான்.இருப்பினும் நடந்தவற்றை கொஞ்ச காலம் மறந்து விட்டு இதயத்தில் ஒரு ஓரம் அதை மறைத்து வைத்து இந்தியன் 2 படத்தை இந்திய திரையுலகம் காணாத அளவுக்கு வெற்றி படமாக்கி அவர்களுக்கு சமர்ப்பிப்போம் என பதிவிட்டிருக்கிறார்.
இதுவும் கடந்து போகும்
இறந்த அப்பாவி இதயங்களுக்கு இரங்கல்கள். நிறைய எதிர்பார்க்கிற மற்றும் நிறைய வேலை தேவைப்படுற படம். ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா ஷுட் பண்ணுங்க இந்தியன் 2 டீம் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், கடவுள் துணை நிற்பார். இதுவும் கடந்து போகும் என ஆறுதல் கூறியிருக்கிறார் .
மீண்டு வாருங்கள்
நடந்தது எதும் நம்ம கைல இல்ல. எல்லாத்தையும் மறந்துட்டு வெளிய வர முயற்சி பண்ணுங்க சார் என்கிறார் இந்த நெட்டிசன்.கடவுள் துணை இருப்பார் மீண்டு வாருங்கள் சங்கர் சார் என்று கூறுகிறார் இவர். எப்படியாவது இந்த படத்தை முடிச்சிட்டு வெளியே வாங்க சார்.. அடுத்து தலைவரை வச்சு முதல்வன் 2 எடுங்க..எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











