பாவனியின் பர்சனலில் தலையிட்ட ஹவுஸ்மேட்ஸ்.. கொதிக்கும் ரசிகாஸ்.. ட்ரெண்டாகும் #WeStandWithPavni
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அபினய் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு குறித்து ஹவுஸ்மேட்ஸ் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் பாவனிக்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி. சீரியல் நடிகையான பாவனி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை பாவனி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சயில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தனது காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து மனம் திறந்து பேசினார்.

பாவனியின் மீது அனுதாபம்
மேலும் தனது இரண்டாவது திருமண முயற்சி குறித்து பேசிய பாவனி, அது நின்று போனது குறித்தும் கடைசி வரை தான் தனியாகதான் இருக்க வேண்டும் போல என்று கூறி கண்ணீர் விட்டார். பாவனியின் இந்த பேச்சால் பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் கலங்கினர். இதனால் பாவனியின் மீதான அனுதாபம் அதிகரித்தது.

நட்பா? காதலா?
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பாவனியும் அபினய்யும் நெருங்கி பழகி வருகின்றனர். பாவனியிடம் ஆண் போட்டியாளர்கள் யாராவது பேசினாலே டென்ஷன் ஆகி விடுகிறார் அபினய். இதனை கவனித்த ஹவுஸ்மேட்ஸ் இருவருக்கும் இடையில் இருப்பது நட்பா அல்லது காதலா என்று சந்தேகித்து வருகின்றனர்.

ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி
ராஜுவும் சிபியும் அவர்களின் ரிலேஷன்ஷிப் குறித்து நேரடியாகவே பேசினர். இதேபோல் இமான் அண்ணாச்சியும் அமீரிடம் பாவனியை அடித்து விளையாட வேண்டாம் என்றார். மேலும் அமீரும் தான் பாவனியுடன் பேசுவதால் அபினய் கோபப்படுவதாக கூறினார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் அவர்களின் ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாவனிக்கு ஆதரவு
இந்நிலையில் இன்று வெளியான புரமோக்களில் அபினய் பாவனி ரிலேஷன்ஷிப் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. தங்களின் ரிலேஷன்ஷிப் குறித்து பேசியதால் கடுப்பான பாவனி, ராஜு மற்றும் சிபியை விளாசினார். இதனை தொடர்ந்து பாவனியின் ரசிகர்கள், #WeStandWithPavni என்ற ஹேஷ்டேக்க்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பெரிதுபடுத்த ஒன்றுமே இல்லை
இந்த பிரச்சனையை பார்த்த இந்த ரசிகர், இவர்களுக்கு என்ன ஆனது? நேற்று மாலையில் இருந்தே எல்லோருக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. இன்று அவர்களுக்குள் என்ன உறவு போகிறது என்று நேரடியாகவே கேட்கிறார்கள். பெரிதுபடுத்த ஒன்றுமே இல்லை.. எல்லாம் நன்றாக இருக்கிறது கமல் சார் என பதிவிட்டுள்ளார்.

தவறான உதாரணம்
மற்றொரு ரசிகரான இவர், இமான், ராஜு, தாமரை, சிபி, நிரூப் எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டை.. மலிவான கெட்ட எண்ணம் கொண்டவர்கள்... தவறான உதாரணம்.. வருண் நோ என்ற பலகையை காட்டியதால் அவரை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்
மற்றொரு ரசிகரான இவர் பாவனி ரெட்டி உங்களின் காதலா நட்பா என்று யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. அது உங்களுக்கு தேவையும் இல்லை... உங்களுக்காக நீங்கள் பேசிக்கொள்வதற்கு ஹேட்ஸ் ஆஃப்... உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











