வாய் கூசாம இப்படி பொய் சொல்றீங்களே: ரஜினி வில்லனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

By Siva

மும்பை: கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்கு செல்லவே இல்லை என்று பொய் சொல்லி நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

அக்ஷய் குமார் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுத்து கனடா குடியுரிமை பெற்றுள்ளார். இந்தியாவில் வசித்துக் கொண்டு கனடா குடியுரிமை ஏன் என்று நெட்டிசன்கள் அவரை விளாசினார்கள்.

கனடா குடியுரிமை பெற்றபோதிலும் கடந்த 7 ஆண்டுகளாக அங்கு செல்லவே இல்லை என்று ட்வீட் செய்தார் அக்ஷய் குமார்.

கனடா

அக்ஷய் குமார் கடந்த 2014ம் ஆண்டு டொரண்டோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி குறித்த ட்வீட்டுகள், புகைப்படங்களை தேடி எடுத்த நெட்டிசன்கள் அக்ஷய் அநியாயத்திற்கு பொய் சொல்கிறார் என்று வறுத்தெடுத்துள்ளனர்.

அக்ஷய்

அக்ஷய்

இது தான் என் வீடு. டொரண்டோ தான் என் வீடு. நான் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இங்கு தான் செட்டில் ஆவேன். நான் இங்கு வந்து தங்கப் போகிறேன் என்று அக்ஷய் முன்பு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது. அதில் இருந்து அவரின் குடியுரிமை பிரச்சனை குறித்து தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.

குடிமகன்

குடிமகன்

பிறந்த நாட்டின் அடையாளத்தை விட்டுக் கொடுத்து அடுத்த நாட்டு குடியுரிமை வாங்குவதில் அக்ஷய் குமாருக்கு அப்படி என்ன பெருமை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நெட்டிசன்கள் விளாசினாலும் ஒரு சில பிரபலங்கள் அக்ஷய்க்கு ஆதரவு அளித்துள்ளனர்.

ஒடிஷா

ஃபனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷா மாநிலத்திற்கு அக்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார். யார் விளாசினாலும் தனது நல்ல குணத்தை மாற்றிக் கொள்ளாதவர் அக்கி என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X