தன்னையே மறந்து முத்தம் கொடுத்த சிம்பு.. கொளுத்தி போட்ட பயில்வான்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகரும், சினிமாவின் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை, நடிகர்கள் பற்றி பல அந்தரங்கமான விஷயத்தை யூடியூப் சேனலில் பேசி வரும் இவர், முத்த காட்சி ஒன்றில் இயக்குநர் கட் சொல்லியும் நடிகர் சிம்பு, நடிகைக்கு தன்னையே மறந்து முத்தம் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதனுக்கு தற்போது நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும் அவர் போகிற இடம் எல்லாம் கண்ணி வெடி இருப்பது போல, ஷகிலாவிடம் சிக்கி அவர், பயில்வானின் கடைசி மகள் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அவர் பதில் சொல்லவிடாமல் திணறடித்தார். அந்த பிரச்சனை ஓய்வதற்குள் பாடகி சுசித்ரா, பயில்வான் பிட்டு பட ஏஜென்ட் என்றும், அவர் பத்திரிக்கையாளரே இல்லை என்றும் பேசி இருந்தார்.

Netizens slam Bayilvan Ranganathan for speaking ill of Simbu

பயில்வான் ரங்கநாதன்: அப்படி பல பிரச்சனைகளில் சிக்கி வரும் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில், சிம்பு குறித்து பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், விண்ணைத்தாண்டி வருவாயா படம் அருமையான காதல் படம் இந்த திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷாவின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்டிரி பக்காவாக இருந்தது. சிம்புவின் திரைப்பயணத்தில் விண்ணைத்தாண்டி வருவதாய ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றார்.

தன்னையே மறந்துவிட்டார்: இந்த படத்தில் பல முத்தக்காட்சிகள் வரும், இந்த காட்சி படமாக்கப்பட்ட போது, கௌதம் மேனன் கட் சொல்லியும், தன்னையே மறந்து போன சிம்பு, த்ரிஷாவிற்கு தொடர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். சிம்பு கொடுத்த முத்தத்தை மறுக்க முடியாமல் நடிகை த்ரிஷாவும் அமைதியாக நின்றார் என்று வெளிப்படையாக பேசி இருந்தார். பயில்வான் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில்,இந்த வீடியோவை டிரெண்டாக்கிய சிம்பு பேன்ஸ், தேவையில்லாத பழைய கதையை பேசி அடுத்தவரின் வாழ்க்கையில் கும்மி அடித்தால், இப்படித்தான் நடக்கும், இனிமேலாவது, பணத்திற்காக அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசாமல், உங்க குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X