twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்டிவைத்து கிரிக்கெட் பேட்டால் அடி..கணவனை கொடுமைப்படுத்தும் ஆலியா பட்..கொந்தளித்த ரசிகர்கள்!

    |

    சென்னை : டார்லிங்ஸ் திரைப்படத்தில் கணவரை கொடுமைப்படுத்திய ஆலியா பட்டுக்கு சோஷியல் மீடியாவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

    பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் தான் பாலிவுட் நடிகையான ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக தனது அறிமுகத்தை கொடுத்தார்.

    அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    திடீரென கிளாமர் மோடுக்கு மாறிய ஹோம்லி நடிகை.. திருமணமாகி வாய்ப்பே இல்லாமல் போனதால் இந்த மாற்றமா?திடீரென கிளாமர் மோடுக்கு மாறிய ஹோம்லி நடிகை.. திருமணமாகி வாய்ப்பே இல்லாமல் போனதால் இந்த மாற்றமா?

    டார்லிங்ஸ்

    டார்லிங்ஸ்

    ஆலியா பட், ஷெபாலி ஷா மற்றும் விஜய் வர்மாவின் நடிப்பில் உருவானத் திரைப்படம் டார்லிங்ஸ். இப்படத்தில் ஆலியா பட் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. அறிமுக இயக்குநர் ஜஸ்மீத் கே ரீனால் இயக்கப்பட்டுள்ள இந்த படம், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிரான துஷ்பிரயோக படமாக உள்ளது.

    பழிக்கு பழி

    பழிக்கு பழி

    அரசாங்க வேலை பார்க்கும் படத்தின் நாயகன் விஜய் வர்மா ஆலியா பட்டை திருமணம் செய்து கொள்கிறார். உயர்அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக வேலையில் ஏற்படும் டார்ச்சரை தனது மனைவி ஆலியா பட்டிடம் காட்டுகிறார். இரவு வந்து விட்டால் போதும், சாப்பாட்டில் உப்பு இல்லை, பக்கத்து வீட்டு பெண் கூட என்ன பேச்சு என ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஆலியாவை அடித்து கொடுமைப்படுத்துகிறார்.

    ஆலியா பட்

    ஆலியா பட்

    கணவனின் கொடுமையால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆலியா பட் தனது அம்மா ஷெபாலி ஷாவுடன் சேர்ந்து கொண்டு அவரை பழிவாங்குவதுதான் படத்தின் கதை. அதற்காக சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து அவரை வீட்டில் ஒரு அறையில் யாருக்கும் தெரியாமல் கட்டிப்போட்டுவைத்துவிட்டு போலீசில் காணவில்லை என புகார் அளித்துவிடுகின்றனர்.

    குடும்ப வன்முறை காட்சிகள்

    குடும்ப வன்முறை காட்சிகள்

    மேலும்,கணவருக்கு மயக்க ஊசிபோடுவது, வாயில் மது ஊற்றுவது, கிரிக்கெட் பேட்டால் கடுமையாக தாக்குவது என படம் முழுக்க கணவனை அடிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த படத்தில் ஆண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். படத்தில் பல குடும்ப வன்முறை காட்சிகள் இருப்பதால் அந்த காட்சியை நீக்க வேண்டும் என சர்ச்சை எழுந்துள்ளது.

    BoycottDarlings

    BoycottDarlings

    மேலும், பல நெட்டிசன்ஸ், இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. #BoycottDarlings #BoycottAliaBhatt என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி உள்ளது.இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட்டை ட்ரோல் செய்தும் கண்டபடி விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

    English summary
    The film Darlings incite domestic violence. Alia Bhatt is in trouble
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X