பொது இடத்தில் அத்துமீறிய ரசிகர்.. நடிகை என்றால் அத்துமீறலாமா? நெட்டிசன்ஸ் விளாசல்!

சென்னை: கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஜல் அகர்வாலிடம் பொது இடம் என்று கூட பார்க்காமல் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார். அந்த ரசிகரின் செயலால் கடுப்பான காஜல் என்ன இது என்று கேட்க.. உடனே அந்த ரசிகர் அங்கிருந்து அப்புறப்படுத்தபட்டார். இது தொடர்பான தற்போது சமூகவலைதளங்களில் வைலானது. இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் அந்த ரசிகரை கடுமையாக திட்டி வருகின்றனர்.

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர், 2008ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

Kajal Aggarwal gets angry when a man touches her inappropriately

நடிகை காஜல் அகர்வால்: மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். அந்த படத்தில் போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

தொழிலதிபருடன் திருமணம்: டப் நடிகையாக பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவரின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடந்ததால், இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு நீல் என்ற மகன் உள்ளார். தனது மகனின் போட்டோவை அவ்வப்போது காஜர் அகர்வால் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.

கடுப்பான காஜல் அகர்வால்: குழந்தை பிறப்பிற்கு பிறகு படங்களில் பிஸியாக நடித்து வரும் காஜல் அகர்வால் ஹைதராபாத்தில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, ரசிகர் ஒருவர் காஜல் அகர்வாலின் இடுப்பை பிடித்து செல்பி எடுக்க முயன்றார். இதனால், கடுப்பான காஜல், என்ன இது என்று கேட்க.. உடனே அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை என்றால் அத்துமீறலாமா என்று அந்த ரசிகரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

விரைவில் படம் ரிலீஸ்: முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய காஜல் அகர்வால், நான் எப்போதும் சினிமாவின் மிகப்பெரிய ரசிகை. நான் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். நான் நடித்து இருக்கும் சத்யபாமா மற்றும் இந்தியன் 2 திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. இரண்டிலும் எனது பங்கு தனித்துவமானதாக இருக்கும்.நீங்கள் அனைவரும் அதைப் பார்க்க நான் காத்திருக்கிறேன். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.

இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இப்படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X