அப்பா பெயரை கெடுக்கன்னே வந்திருக்கு: சூப்பர் ஸ்டார் மகளை விளாசும் நெட்டிசன்கள்
மும்பை: அப்பா பெயரை கெடுப்பதற்கே வந்திருப்பதாக பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகளை நெட்டிசன்கள் திட்டுகிறார்கள்.
பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் மிஷால் க்ரிபாலினி என்கிற வாலிபரை காதலித்து வருகிறார். மிஷாலும் அமெரிக்காவில் தான் உள்ளார்.
ஐரா தனது காதலருடன் சேர்ந்து புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஐரா கான்
ஐரா கான் தனது காதலருடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டத் துவங்கிவிட்டனர்.

ஆமீர் கான்
அப்பா ஆமீர் கானின் பெயரை கெடுக்கவே வந்திருக்கிறார் ஐரா. இப்படியா காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவது? ஒரு முஸ்லீம் பெண்ணாக இருந்து கொண்டு கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார். அவரால் ஆமீர் கானின் பெயரும் சேர்ந்து கெடுகிறது என்று நெட்டிசன்கள் திட்டியுள்ளனர்.

ஆதரவு
சிலர் முஸ்லீம் என்பதால் ஐரா கானை திட்டுவதை பார்த்த ஆமீர் கானின் ரசிகர்களோ, நீ ஆடும்மா என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரா கானின் வீடியோ அழகாக உள்ளது. சும்மா சும்மா மதத்தின் பெயரை குறிப்பிட்டு யாரையும் திட்டி மனதை புண்படுத்த வேண்டாம். யாருக்கு என்ன பிடிக்கிறதோ செய்துவிட்டு போகட்டும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

சின்னப் பெண்
உங்க அப்பா ஆமீர் கான் எவ்வளவு அழகாக உள்ளார். ஆனால் நீங்கள் அவர் மகள் தானா, பார்க்க அப்படித் தெரியவில்லையே என்று பாவம் ஐராவின் அழகை தேவையில்லாமல் விமர்சித்துள்ளனர். அழகு என்பது உடம்பில் அல்ல உள்ளத்தில் தான் உள்ளது என்பது தெரியாமல் அந்த சின்னப் பெண்ணை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐரா கான் முன்னதாக தனது தந்தையின் மீது ஏறி அமர்ந்தபோது எடுத்த புகைப்படம் வெளியானது. அதை பார்த்துவிட்டு ஆமீர் கானை பலரும் விளாசினார்கள். வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா இருப்பது என்று கேட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











