தொப்புள் பியர்சிங், டாட்டூ: பிரபல நடிகரின் மகளை விளாசிய நெட்டிசன்கள்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா தனது டாட்டூ மற்றும் தொப்புள் பியர்சிங்கை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா அமெரிக்காவில் உள்ளார். அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள், காதலரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐரா கான்

ஐரா கான் தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார், மேலும் தொப்புளில் பியர்சிங் செய்துள்ளார். இதையடுத்து இரண்டுமே தெரியும் வகையில் புகைப்படங்கள் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் வீட்டு பிள்ளைகள் டாட்டூ குத்துவதும், தொப்புளில் பியர்சிங் செய்வதும் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்

ஐரா கானின் முதல் டாட்டூ புகைப்படத்தை பார்த்தவர்கள் அழகாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, முஸ்லீம் பெண் டாட்டூ எல்லாம் குத்தக் கூடாதும்மா, உங்கப்பா ஆமீர் கான் சொல்லித் தரவில்லையா. என்னம்மா ஐரா, இப்படி செஞ்சுட்டீங்களேம்மா என்று விமர்சித்துள்ளனர். 21 வயதாகும் ஐராவுக்கு தந்தை வழியில் நடிக்க வருவதில் விருப்பம் இல்லையாம்.

 முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

ஐரா கான் தன் மனதிற்கு பிடித்ததை செய்து விமர்சனத்திற்குள்ளாவது இது முதல் முறை அல்ல. முன்னதாக அவர் தனது தந்தையின் மீது ஏறி அமர்ந்திருந்த புகைப்படம் வெளியானது. அதை பார்த்தவர்கள் வயதுக்கு வந்த பெண் இப்படியா அப்பாவுடன் நெருங்கிப் பழகுவது என்றார்கள். மேலும் பலர் ஆமீர் கானை திட்டினார்கள்.

 ஜுனைத் கான்

ஜுனைத் கான்

ஐராவுக்கு நடிப்பில் விருப்பம் இல்லாவிட்டாலும் அவரின் அண்ணன் ஜுனைத் கானுக்கு உள்ளது. மகன் பற்றி ஆமீர் கான் கூறியதாவது, ஜுனைதின் நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆனேன். அவர் தாராளமாக நடிக்க வரலாம். ஆனால் மற்றவர்களை போன்று ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வேண்டும். ஸ்கிரீன் டெஸ்ட்டில் பாஸ் ஆனால் மட்டுமே நடிக்க வர வேண்டும். இல்லை என்றால் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X