என்ன கன்றாவிடா.. ஜாலியோ ஜிம்கானா பட பாடலால் கடுப்பான நெட்டிசன்ஸ்.. இணையத்தில் டிரெண்டாகும் மீம்ஸ்!
சென்னை: அந்த காலத்தில் எல்லாம் ஒரு படத்தில் இருந்த பாட்டு வெளியானால், அந்த பாடல் மனதில் அப்படியே பதிந்துவிடும், பாடல் வரி மனதில் பதியவில்லை என்றால், தப்பு தப்பாகவாவது அந்த பாடலை நாம் முணுமுணுத்துக்கொண்டு இருப்போம். ஆனால், இப்போது வரும் பாடலை கேட்டால் என்ன கன்றாவிடா இது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அப்படி ஒரு பாடல் தான் தற்போது வெளியாகி ட்ரோல் மெட்டீரியலாகி உள்ளது.

நடன இயக்குநர், நடிகர்,இயக்குநர் என பல திறமைகளை கொண்ட பிரபு தேவா, விஜய் நடித்த கோட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். மேலும் அபிராமி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். டிரான்ஸ் இந்தியா மீடியா மற்றும் என்டர்டெயின்ட் மென்ட் பிரைவெட் லிமிடேட் தயாரிக்கும் இப்படத்திற்கு அஸ்வின் விஜயகுமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

எல்லாமே டபிள் மீனிங்: இந்த படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. ஆண்ட்ரியா பாடி உள்ள இந்த பாடலில் மொத்தமும் டபிள் மீனிங்காகவே உள்ளது. அதாவது 'ஒரு போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியை வச்சு அடிப்பான்.. டாக்டரை கட்டிக்கிட்டா ஊசியால குத்துவான்.. பாடி பில்டரை கட்டிக்கிட்ட தினமும் தண்டால் எடுப்பான்.. டிரைவரை கட்டிக்கிட்டா ஹார்ன் அடிப்பான் .. வேலைவெட்டி இல்லாதவனை கட்டிக்கிட்டா எனக்கு மட்டும் வேலை செய்யுவான்.. என மிகவும் அருவருப்பான வார்த்தை அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வார்த்தை மட்டும் தான் அப்படி என்று பார்த்தா, மடோனா செபாஸ்டின் மோசமான அசைவுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

என்ன கன்றாவி: இணையத்தில் இந்த பாடலைப்பார்த்த இணையவாசிகள் என்ன கன்றாவியான பாடல் என்றும், எப்படிப்பட்ட வரிகள், இவ்ளோ ஓப்பனாவா எழுதுவீங்க, இப்படியும் சில பாடலாசிரியர் இருக்கானுங்க, இப்டியெல்லாம் எழுதி இளையராஜா கிட்ட குடுத்தா என்ன நடக்கும் என்று எக்ஸ் தள பக்கத்தில் பாடலை கிழித்து தொடங்கவிட்டு, மீம்ஸ்களை டிரெண்டாக்கி வருகின்றனர்.

படத்தின் கதை: நடிகர் பிரபுதேவா இந்த படத்தில் பிணமாக நடித்திருக்கிறார். நான்கு பெண்கள், மடோனா செபாஸ்டியன் தலைமையில் பிரபுதேவா பிணத்தை தூக்கிக்கொண்டு சுத்துகின்றனர். பிரபு தேவா எப்படி இறந்தார். அவரது உடலை பெண்கள் தூக்கிக்கொண்டு அலைவது ஏன் என்பதை இயக்குநர் நகைச்சுவையுடன் படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். சார்லி சாப்ளின் மற்றும் சார்லி சாப்ளின் 2 படங்களுக்குப் பிறகு இயக்குனர் சக்தி சிதம்பரத்துடன் பிரபு தேவா மூன்றாவது முறையாக ஜாலியோ ஜிம்கானா படத்தில் இணைந்துள்ளார்.



Click it and Unblock the Notifications











