விஷாலுக்கு நினைவிருக்கு உங்களுக்கு இல்லையா, 'அம்மா'ன்னா தொக்கா?: கமலை விளாசும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: அம்மாவை விட சசி கபூர் உங்களுக்கு முக்கியமாகிவிட்டாரோ என்று நெட்டிசன்கள் கமலை கேட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாவது நினைவு நாள் இன்று. அதிமுகவினர் அவரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செய்துள்ளனர். இந்நிலையில் கமல் ஹாஸன் கடந்த ஆண்டு இதே நாள் ட்வீட்டியதை நெட்டிசன்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கமல் ட்வீட்டியதை யாரும் இன்னும் மறக்கவில்லை.
கமல்
பாலிவுட் நடிகர் சசி கபூர் மரணம் அடைந்த செய்தி அறிந்த கமல் ஹாஸன் ட்விட்டர் மூலம் அனுதாபங்கள் தெரிவித்துள்ளதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
அனுதாபங்கள்
கலைஉலகம் ,அரசியல் இரண்டிலும் தாரகையாக இருந்த ஜெ மறைவின் போது சும்மா வெத்துக்கு சார்ந்தோருக்கு அனுதாபங்கள் எனக்கூறிய தாங்களா சசிகபூர் மறைவிற்கு இவ்வளவு அக்கறையுடன் இரங்கல் தெரிவிப்பது?வேறுபட்ட விந்தை மனிதர்! என ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரும்பு மனுஷி
இரும்பு மனுஷி நம்மை விட்டு சென்று ஓராண்டு ஆகிவிட்டது என்று ஜெயலலிதாவின் நினைவு நாளை நினைவில் கொண்டு நடிகர் விஷால் ட்வீட்டியுள்ளார். ஆனால் கமல் கண்டுக்கவே இல்லை.

நாகரீகம்
அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்தீர்களே கமல், அரசியல் நாகரீகம் கருதியாவது ஜெயலலிதாவின் நினைவு நாள் அன்று ஏதாவது ட்வீட்டக் கூடாதா என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











