ஆன்ட்டி, கோடீஸ்வர புருஷன் சோறு போடலையா?: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானை நெட்டிசன்கள் வாய்க்கு வந்த படி எல்லாம் பேசியுள்ளனர்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு தைமூர் அலி கான் என்கிற 2 வயது மகன் உள்ளார். தாயான பிறகும் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

Netizens slam Kareena Kapoor over weight issue

இந்நிலையில் கரீனா கபூர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு எடுத்த புகைப்படத்தை அவரின் மேனேஜர் பூனம் தமானியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

பூனம் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ, கரீனாவுக்கு வயதாகிவிட்டது, மேக்கப் இல்லாமல் ஆன்ட்டி போன்று இருக்கிறார். வயதாகிவிட்டதோடு இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தவர் போன்று உள்ளார். பெரிய நவாபான சயிப் அலி கானை திருமணம் செய்து என்ன செய்ய. சரியாக சோறு கூட கிடைக்காமல் இப்படி எலும்பும் தோலுமாக உள்ளார். யாராவது கரீனாவுக்கு சோறு வாங்கிக் கொடுங்களேன். எலும்பெல்லாம் தெரிகிறது என்று நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.

நெட்டிசன்களின் விமர்சனத்தை பார்த்த கரீனாவின் ரசிகர்களோ, வயதானாலும் அவர் அழகாக உள்ளார். ஓல்டு இஸ் கோல்டு என்று கரீனாவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். முன்பு கரீனா சைஸ் ஜீரோவாக இருந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார். தற்போது அவர் மீண்டும் சைஸ் ஜீரோவுக்கு திரும்புவதாக விமர்சனம் எழுந்துள்ளது. கரீனாவை மிஸ் பண்ணுவதை தெரிவிக்க பூனம் அவரின் புகைப்படத்தை வெளியிட அது வேறு மாதிரி ஆகிவிட்டது.

உடல் எடைக்காக கரீனா அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார். அதை எல்லாம் அவர் கண்டுகொள்வதே இல்லை. அவர் ஜிம்முக்கு செல்லும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகும். அதை பார்ப்பவர்கள், இருக்கும் எலும்பையும் ஜிம்மில் தேய்க்கப் போகிறீர்களா என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கரீனா கபூர் குண்டாக இருப்பதும், எலும்பும் தோலுமாக இருப்பதும் அவர் இஷ்டம். அப்படி இருக்கும்போது நெட்டிசன்கள் நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவரை விளாசுகிறார்கள். அவரை தங்களின் படங்களில் ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமே அவரின் உடல் எடை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X