'ஏ' பட நடிகை கலாச்சாரத்தை பற்றி பேசலாமா?: மதுமிதாவை விளாசும் நெட்டிசன்கள்
Recommended Video
சென்னை: தமிழ் பொண்ணு, கலாச்சாரம் என்று பேசிய மதுமிதாவுக்கு ஆதரவு கிடைத்துள்ளபோதிலும் அவர் நடித்த சில படங்களை கூறி அவரை நெட்டிசன்கள் விளாசுகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தமிழ் பொண்ணு, கலாச்சாரம் பற்றி பேசுவது புதிது அல்ல. இந்நிலையில் இந்த சீசனில் ஜாங்கிரி மதுமிதா தமிழ் பொண்ணு, கலாச்சாரம் பற்றி பேசியது சக போட்டியாளர்களுக்கு பெரிய குற்றமாக தெரிகிறது.
அதிலும் குறிப்பாக வனிதா விஜயகுமாரால் மதுமிதா கூறியதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

எதிர்ப்பு
தமிழ் பொண்ணு, கலாச்சாரம் பற்றி பேசிய மதுமிதாவுக்கு நெட்டிசன்களிடையே ஆதரவு கிடைத்துள்ளது, அதே சமயம் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதா எப்படி மதுமிதாவிடம் தேடித் தேடி குறை கண்டுபிடித்து நீயெல்லாம் தமிழ் பொண்ணுன்னு சொல்ற, கலாச்சாரம் பற்றி பேசுற என்பது போல் நெட்டிசன்களும் சில காரணங்களை கண்டுபிடித்துள்ளனர்.

மதுமிதா
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்தவர் தானே நீங்கள் என்று நெட்டிசன்கள் மதுமிதாவை விளாசுகிறார்கள். ஏ படத்தில் நடித்துவிட்டு தற்போது பெரிய நல்லவர் மாதிரி தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசினால் அனைவரும் நம்பிவிடுவோமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதே இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த யாஷிகாவை யாரும் குறை சொல்லவில்லையே என்று சிலர் மதுமிதாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
தெரியாதா?
தமிழ் கலாச்சாரம் பற்றி பேசும் மதுமிதா வாய்ப்பு கிடைத்தால் அடல்ட் படங்களில் நடிக்கிறார். இதை என்ன சொல்வது? இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவரின் கதாபாத்திரம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். ஓட்டுகளை பெற தமிழ் கலாச்சாரத்தை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார். என்ன ஒரு முட்டாள்தனம். வளர்ப்பு சரியில்லை என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
கேமரா
மதுமிதா தனக்குத் தானே புலம்புவது கூட நடிப்புத் தான் என்கிறார்கள் நெட்டிசன்கள். எந்த காட்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டுவார்கள் என்பது தெரியாததால் அனைத்து காட்சியிலும் புலம்புகிறார் மதுமிதா. நிஜத்தில் ஒரு மாதிரியாகவும், பிக் பாஸ் வீட்டில் வேறு மாதிரியாகவும் இருக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











