என்னாச்சு நிரூப்புக்கு...இப்படியே போனால் அடுத்த வாரம் இவர் காலி ஆகிடுவாரோ
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 சனிக்கிழமை எபிசோடில் பேசிய கமல், நிரூப் தனித்துவமாக விளையாடுவதாக பாராட்டினார். இதற்கு பிறகு நிரூப்பின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்றப்பட்டுள்ளதை அனைவரும் பார்க்க முடிகிறது.
ஆரம்பத்தில் பிரியங்கா, அபிஷேக் ஆகியோருடன் நட்பு முக்கியம் என அமைதியாக இருந்து வந்தார் நிரூப். பிறகு பிரியங்காவிடம் இருந்து ஏமாற்றி காயினை நிரூப் எடுத்துக் கொண்டார். இதனால் நிரூப் மீது மன வருத்தத்தில் இருந்து வந்தார் பிரியங்கா.

நிரூப் – பிரியங்கா சண்டை
ஆனால் தன்னிடம் இருக்கும் காயினின் ஆளுமை வந்த போதும் சரி, காயின் பவரை பயன்படுத்தி கேப்டன் ஆன போதும் சரி வீட்டில் நிரூப்பின் சத்தம் ஓவராக இருந்தது. பலருடனும் மோதலில் ஈடுபட்டார். நிரூப் மீது அனைவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டது. அப்போதே பிரியங்கா, நிரூப் இடையேயான மோதல் துவங்கி விட்டது. இதனால் பல சமயங்களில் ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர். அதற்கு பிறகு சில நாட்கள் மிகவும் அமைதியானார் நிரூப்.

பேசினாலே சண்டை தான்
வைல்ட் கார்டு என்ட்ரியில் அபிஷேக் மீண்டும் வந்து சென்ற பிறகு பிரியங்கா, நிரூப் இருவரிடமும் பல மாற்றங்கள் காணப்படுகிறது. எப்போதும் ஒன்றாகவே இருந்தவர்கள் தற்போது பேசிக் கொள்வது குறைந்து விட்டது. அப்படியே பேசினாலும் அது சண்டையாக தான் இருக்கும்.

உசுப்பேற்றி விட்ட கமல்
பிரியங்கா, பாவனியுடனும், நிரூப், ராஜு உள்ளிட்டோருடனுமே அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அபிஷேக் இரண்டாவது முறையாக வெளியே போன பிறகு, கமலிடம் பேசிய நிரூப், இனி தான் தனக்காக விளையாட போவதாகவும், யாருக்காகவும் நிற்க போவதில்லை என்றும் பேசினார். கமலும் அதை பாராட்டினார். நேற்றைய எபிசோடில் கமல் பிரியங்காவையும் பாராட்டினார்.

சவுண்ட் ஓவராக இருக்கே
இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோவில், சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் நிரூப் ஓவர் சவுண்ட் கொடுக்க துவங்கி உள்ளார். பிரியங்கா, நிரூப் இடையே மீண்டும் மிகப் பெரிய சண்டை நடந்து வருகிறது. பிரியங்கா selfish, evil, மற்றவர்களின் துன்பத்தில் சந்தோஷப்படுபவர் என முகத்திற்கு நேராக கடுமையாக திட்டுகிறார் நிரூப்.

இப்படியே போனால் காலி தான்
இதை பார்த்த நெட்டிசன்கள், நிரூப்பிற்கு என்ன ஆயிற்று. கமல் பாராட்டியதற்கு பிறகு நிரூப்பின் நடவடிக்கையே மாறி விட்டதே. ஓவர் ஆட்டமா இருக்கே. இப்படியே போனால் அடுத்த வாரம் நிரூப் தான் காலி ஆவார் போல இருக்கு. டாப் 10 ல் வந்து விட்டதால் தலைகால் தெரியாமல் நிரூப் ஆடுவதை போல் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அவருக்கே அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











