தாத்தா இறந்த மறுநாள் பார்லருக்கு போன ஆள் தானே: நடிகையின் மகளை விளாசிய நெட்டிசன்ஸ்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை கஜோலின் மகளை நெட்டிசன்கள் மரணமாக கலாய்த்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் கடந்த 27ம் தேதி மும்பையில் காலமானார். அவரின் இறுதிச் சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மாமனார் இறந்த துக்கத்தில் நடிகை கஜோல் ஐஸ்வர்யா ராயை கட்டிப்பிடித்து அழுத புகைப்படங்கள் வெளியாகின.

வீரு தேவ்கன் இறந்த மறுநாள் கஜோலின் 16 வயது மகள் நியாசா பார்லருக்கு சென்றார். அப்படியே நண்பர்களுடன் வெளியே சென்று சாப்பிட்டார்.

பிரார்த்தனை கூட்டம்

வீரு தேவ்கனின் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட நியாசா தாத்தா இறந்த துக்கம் தாங்காமல் கதறி அழுதார். அவருக்கு தந்தை அஜய் தேவ்கன் ஆறுதல் கூறி அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் நியாசாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். தாத்தா இறந்த மறுநாள் மாடர்னாக உடை அணிந்து கொண்டு கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் சிரித்துக் கொண்டு பார்லருக்கு சென்றவர் தானே. தாத்தாவின் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பார்லருக்கு சென்றுவிட்டு தற்போது ஊரை ஏமாற்ற நீலிக் கண்ணீரா என்று கேட்டு நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

புகைப்படம்

நியாசா சிரித்த முகமாக பார்லருக்கு சென்ற புகைப்படங்கள் வெளியானதால் அதை சரி செய்ய தேவ்கன் குடும்பத்தார் அவர் அழுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். படத்தில் நடித்தால் பரவாயில்லை, நிஜத்திலும் அநியாயத்திற்கு நடிக்கிறார்களே என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அஜய்

அஜய்

நானும், என் மனைவி கஜோலும் சினிமாவில் இருப்பதால் எங்களை விமர்சிப்பது நியாயம். ஆனால் எங்களின் குழந்தைகளை விமர்சிப்பது சரியில்லை. அவர்கள் குழந்தைகள், தயவு செய்து அவர்களை விட்டுவிடுங்கள் என்று முன்பு அஜய் தேவ்கன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவர் பேச்சை நெட்டிசன்கள் கேட்பதாக இல்லை.

 சின்னப் பெண்

சின்னப் பெண்

பலரும் நியாசாவை விளாசினாலும் சிலரோ பாவம் சின்னப்புள்ள விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளனர். இதற்கிடையே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கஜோலின் அம்மா தனுஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X