லைட்டா தானா, நம்பிட்டோம்: ஓவியாவை விளாசும் நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: 90 எம்.எல். படம் குறித்து ட்வீட்டிய ஓவியாவை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர், ஸ்னீக் பீக் எல்லாம் இரட்டை அர்த்த வசனங்களாக உள்ளது.
இந்நிலையில் ஓவியா போட்ட ட்வீட்டை பார்த்து நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
ஓவியா
நேற்று 90 எம்.எல். படம் பார்த்தேன். படம் சிரித்து மகிழும்படி உள்ளது. கொஞ்சம் அடல்ட் விஷயங்கள் இருப்பதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கவும். 5 மணி காட்சியில் உங்களை சந்திக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் ஓவியா.
பெருமை
ஓவியாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் நீங்க தான் உங்க படத்தை பற்றி பெருமையாக சொல்லிக்கணும் என்று தெரிவித்துள்ளார்.
அன்பு
இனி தமிழ்நாட்டு பெற்றோர்களின் அன்பு ஓவியாவுக்கு கிடைக்காது என்கிறார்கள் நெட்டிசன்கள். ட்ரெய்லர், ஸ்னீக் பீக்கை பார்த்து முகம் சுளித்தவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் சம்பாதித்த நல்ல பெயரை ஓவியா 90 எம்.எல். படம் மூலம் கெடுத்துக் கொண்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஓவியாவை திட்டி சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.


Click it and Unblock the Notifications











