சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஓவியா
Recommended Video

சென்னை: ஓவியா நடித்த 90 எம்.எல். படத்தை பார்த்தவர்கள் அவரை விளாசி வருகிறார்கள். ஜூலியை பாராட்டுகிறார்கள்.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் நேற்று வெளியானது. படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த வாலிபர்கள் மீடியாவை பார்த்ததும் முகத்தை மூடிக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
அதில் இருந்தே படம் எப்படி இருந்தது என்று தெரிந்துவிட்டது.

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் ஜூலி பொய் பேசியதற்காக அவரை தொடர்ந்து நெட்டிசன்கள் திட்டிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நெட்டிசன்கள் மனம் மாறிவிட்டனர்.

90 எம்.எல்.
90 எம்.எல். படம் பார்த்தவர்கள் ஓவியா என்ன இப்படி தரம் தாழ்ந்து நடிக்கத் துவங்கவிட்டார். தன் இஷ்டப்படி நடப்பேன், நடிப்பேன் என்பது எல்லாம் சரி. ஆனால் அதற்காக இந்த அளவுக்கா மோசமாக நடிப்பது என்று அவர் மீது மரியாதை வைத்திருந்தவர்கள் கூட கோபப்பட்டுள்ளனர்.

ஜூலி
ஓவியாவை பார்க்கும் போது ஜூலி நல்லவர். அவர் ஒரு தமிழச்சி. ஓவியா போன்று இந்த மாதிரி படங்களில் எல்லாம் நடித்து பெண்களின் மானத்தை வாங்க மாட்டார் என்று நெட்டிசன்கள் ஜூலிக்கு ஆதரவாக பேசத் துவங்கியுள்ளனர்.

மன்னிப்போம்
வாழ்க்கையில் யார் தான் பொய் பேசவில்லை. ஜூலி ஏதோ தெரியாமல் பொய் பேசிவிட்டார். அதையே நினைவில் வைத்துக் கொண்டு அவரை விளாசுவது சரி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











