பாவனி இதுதான் உங்க போல்டான ஆட்டமா? அக்ஷரா போனாலும் அழுகையை விடாத பாவனி.. பங்கமாக்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் இளம் போட்டியாளர்கள் அதிகம் இல்லாத நிலையில், பாவனியை வைத்தே லவ் டிராக்கை முடிந்த வரை முடிச்சு போட்டு அதை சர்ச்சையாக மாற்றியே விஜய் டிவி டிஆர்பியை எட்ட முயற்சித்தது.
அபிநய் பாவனி உறவு பஞ்சாயத்து முடிந்த நிலையில், அமீர் பாவனி இடையே லவ் டிராக்கை ஆரம்பித்து வைத்து நாட்களை கடத்தினர்.
இப்படி பாவனியை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள் சூழந்த நிலையில் விளையாட முடியாமல் இருந்த அவர் வீக்கெண்டில் கமல் சாரிடம் அடுத்த வாரம் என் கேமை பாருங்க என சொன்ன நிலையில், மீண்டும் பாவனி ஏன் அழுகிறார்? என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

எமோஷனல் டச்
ஆண் போட்டியாளர்களை விட அதிகமாக இந்த சீசனில் மட்டுமின்றி பல பிக் பாஸ் சீசன்களிலும் அழுகையை வைத்து எமோஷனல் டச் கொடுத்து பெண் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதிலும், இந்த சீசன் தொடங்கியதில் இருந்து 90 நாட்கள் நெருங்க உள்ள நிலையில் வரை அழுகாச்சி டிராமா அரங்கேறி வருகிறது. அக்ஷரா சென்ற பின்னரும் பாவனி அழுகாச்சி டிராமாவை விடவில்லை.

பாவமான முகத்துடன்
இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பாவமான முகத்துடன் பாவனி ஒப்பாரி வைத்தே இதுவரை சேவ் ஆகி வருகிறார் என்கிற கருத்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் மத்தியில் உள்ளது. பாவனி அழும் காட்சிகளை மட்டுமே அடுக்கி தனியாக ட்ரோல் வீடியோக்களை போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

கமலிடம் சவால்
பாவனி மற்றும் அபிநய் இருவருமே சேஃப் கேம் ஆடுகிறார்கள் என ஏற்கனவே கமல் கண்டித்த நிலையில், இந்த வாரம் பாவனியை மக்கள் மூன்றாவதாக சேவ் செய்திருக்கிறார்கள் என்று சொன்னதும் சந்தோஷப்பட்ட பாவனி இந்த வாரம் பாருங்க சார் என்னோட ஆட்டத்தை என கமலிடமே சவால் விட்டு இருந்தார்.

இந்த ஆட்டம் போதுமா
ஆரம்பத்தில் காமெடி பர்ஃபார்மன்ஸ்களை பண்ணி ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட ராஜு கடந்த சில வாரங்களாக கேமில் அதிகளவில் ஃபோகஸ் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அவரும், இந்த வாரம் சாகும் வரை போராடுவேன் என சொன்ன நிலையில், பாவனியின் முட்டையை தலையில் உடைத்த காட்சிகளை போட்டு ராஜு பாய் ஆர்மியினர் இந்த ஆட்டம் போதுமா என கெத்துக் காட்டி வருகின்றனர்.
Recommended Video

அழ ஆரம்பித்த பாவனி
அம்மா என் முட்டையை உடைச்சிட்டான் என சின்ன பசங்க கம்ப்ளைண்ட் பண்ணி அழுவது போல பாவனி அழுது கொண்டே செல்லும் காட்சியை இன்றைய புரமோவில் பார்த்த ரசிகர்கள் இதுதான் உங்களோட போல்டான ஆட்டமா என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











