ஜாக்கெட் இல்லாமல் சேலை அணிந்த ப்ரியங்கா சோப்ரா: துப்பாத குறையாக திட்டிய நெட்டிசன்ஸ்
Recommended Video
நியூயார்க்: பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஜாக்கெட் அணியாமல் சேலை உடுத்தியதை பார்த்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் கணவர் நிக் ஜோனஸுடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில் வசித்தாலும் அவர் தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மும்பைக்கும், நியூயார்க்கிற்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.
ப்ரியங்கா சோப்ரா
ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தும் ப்ரியங்கா சோப்ரா இன்ஸ்டைல் ஃபேஷன் பத்திரிகையின் அட்டைப் படத்திற்கு சேலை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த பத்திரிகைக்காக நடத்தப்பட்ட போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது. சேலை அணிவதை பெருமையாக நினைப்பதாக தெரிவித்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
நெட்டிசன்ஸ்
சேலை அணிவது பெருமை என்று கூறுகிறீர்களே, புகைப்படத்தில் சேலையையே பார்க்க முடியவில்லை. துணி இல்லாத உங்களின் முதுகு தான் தெரிகிறது. ஜாக்கெட் அணியாமல் சேலை உடுத்துவது தான் இந்திய பாரம்பரியமா, வெளிநாட்டவரை திருமணம் செய்துவிட்டால் நம் பழக்க, வழக்கங்களை மறுந்துவிடுவதா என்று நெட்டிசன்கள் ப்ரியங்கா சோப்ராவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கலாச்சாரம்
இந்த புகைப்படத்தில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் நம் இந்திய கலாச்சாரத்தை தவறாக சித்தரிக்காதீர்கள். இந்தியாவில் பெண் உங்களை போன்று தான் ஜாக்கெட் இல்லாமல் சேலை உடுத்திக் கொண்டு வெளியே செல்கிறார்களா என்று நெட்டிசன்கள் ப்ரியங்காவை விளாசியுள்ளனர்.

பாரம்பரியம்
சேலையில் கிரியேட்டிவாக வருவது என்றால் இப்படித் தான் ஜாக்கெட் அணியாமல் இருப்பதா? இதற்கு நீங்கள் எதையுமே அணியாமல் இருந்தால் இன்னும் கிரியேட்டிவாக இருக்கும். டாப்லெஸ்ஸாக போஸ் கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் தயவு செய்து சேலை அணிய வேண்டாம் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை
உங்களை சொல்லி குற்றமில்லை ப்ரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டில் இருப்பதால் அவர்களுக்கு ஏற்றது போன்று நடந்து கொள்ள வைக்கிறார்கள். புத்திசாலியான நீங்களே சுயபுத்தியில்லாமல் செயல்படும்படி ஆகிவிட்டது. இனியும் இது போன்று சேலையை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் ப்ரியங்கா சோப்ராவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











