பேண்ட் ஜிப் போட மறந்துட்டீங்க: என்.ஜி.கே. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை: ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவர். தனது இடுப்பு பகுதி சிக்கென்று இருப்பதை காண்பிக்க அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஜிப் போடாமல் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தை பார்த்து சிலர் புகழ்ந்தாலும், சிலர் விளாசியுள்ளனர். ஜிப் போட மறந்துவிட்டீர்கள், ஏன் இது போன்ற கேவலமான புகைப்படத்தை பெருமையுடன் வெளியிடுகிறீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐஸ்வர்யா ராய், மாதுரி தீக்சித் போன்ற நடிகைகள் இது போன்ற மோசமான புகைப்படங்களை வெளியிட்டு பார்த்திருக்கிறீர்களா, உங்களுக்கு திறமை மீது நம்பிக்கை இல்லாததால் இந்த அளவுக்கு இறங்கிவிட்டீர்கள் என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
பேண்ட் ஜிப்பை திறந்துவிட்டு புகைப்படம் எடுத்து வெளியிடுவது பெண்கள் முன்னேற்றம் இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள். ரகுல் ப்ரீத் சிங் #girlpower என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியதால் தான் கூடுதல் திட்டு விழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











