கர்ப்பிணியின் வயிறை எப்படி தொடலாம்?: நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்
Recommended Video
திருச்சூர்: மலையாள நடிகர் சுரேஷ் கோபி கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் கை வைத்தது தொடர்பாக அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.
மலையாள நடிகர் சுரேஷ் கோபி லோக்சபா தேர்தலில் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்டார். பிரச்சாரத்தின்போது கர்ப்பிணி ரசிகை ஒருவர் அவரிடம் அன்பு கோரிக்கை விடுத்தார்.
அதாவது தனது வயிற்றை தொட்டு கருவில் இருக்கும் குழந்தையை ஆசிர்வதிக்குமாறு அந்த பெண் கேட்டார்.
ஆசி
கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நிறைவேற்ற சுரேஷ் கோபி காரில் இருந்தபடியே அவரின் வயிற்றை தொட்டு குழந்தையை ஆசிர்வதித்தார். அதை பார்த்த ரசிகை மகிழ்ச்சி அடைந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ரசிகை
வீடியோவில் சுரேஷ் கோபி தன் வயிறை தொட்டதும் அந்த கர்ப்பிணி சந்தோஷமாக சிரிக்கிறார். ஆனால் ரசிகையின் ஆசையை நிறைவேற்றி வைத்த சுரேஷ் கோபியை பிற அரசியல் கட்சியினரும், நெட்டிசன்களும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
விளாசல்
சுரேஷ் கோபி கேவலமான புத்தியுடன் நடந்து கொண்டதாக விமர்சிக்கிறார்கள். பொது இடத்தில் ஒரு கர்ப்பிணியின் வயிற்றை இப்படியா தொடுவது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தாய்
ஒரு கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றி வைத்த சுரேஷ் கோபியை சிலர் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











