ரசிகைகளுக்காக ஓடோடி வந்த விஜய்.. மனைவிக்காக ஏன் பேசல? விஜய்யை விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மார்ச் மாதம் 26ஆம் தேதி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது புகார் அளித்தார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாளர்களில் சில பெண்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சுக்களை மிகவும் காட்டமான முறையில் விமர்சித்தார் பொன்ராஜ். மேலும் தனது விமர்சனத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இதனால் விஜய் அவர் மீது புகார் அளித்தார்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பலரும் விஜய்யை பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள். மேலும் தவெக நிர்வாகிகளில் சிலர், " ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க, தனக்கு ஒன்னுனா கூட அவர் அமைதியா இருந்துருவாரு. ஆனா தன் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதனா ஒன்னுனா முதல் ஆளா வந்து நிக்கிறது நம்ம தலைவர் மட்டும் தான்" என்று எல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

விஜய்யின் இந்த செயலுக்கு ஒருபுறம் ஆதரவு கிடைத்தாலும், மறுபுறம் விமர்சனங்கள் கடுமையாக எழுந்து வருகிறது. அதாவது, " விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்ததற்கு சங்கீதாவை மிகவும் மோசமாகவும் தரம் தாழ்ந்தும் விமர்சித்த தனது ரசிகர்களையும், தவெக தொண்டர்களையும் விஜய் கண்டிக்கவே இல்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மோசமான பேச்சு: விஜய் குறித்தோ, தவெக குறித்தோ அரசியலாக யார் கேள்வி எழுப்பினாலும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாகவும், கேவலமாகவும், அருவறுக்கத்தக்க வகையிலும் விமர்சித்து வருகிறார்களே அவர்களை எல்லாம் விஜய் கண்டிக்க மாட்டாரா? கட்டுப்படுத்தமாட்டாரா? இல்லை தனது விர்ச்சுவல் வாரியர்ஸ் அணி இப்படித்தான் செயல்படும், என்று கண்டுகொள்ளாமலும் கண்டிக்காமலும் இருக்கிறாரா?

ஆதரவாக?: தவெக நிர்வாகிகள் சிலரால் பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், பண ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக பெண்கள் பலரும் இணையத்திலும் பத்திரிகையாளர்கள் முன்பு ஆதாரங்களுடன் குமுறுகிறார்களே? அவர்களுக்காக விஜய் நியாயம் கேட்டு புகார் அளிக்க மாட்டாரா? ஆதரவாக குரல் கொடுக்க மாட்டாரா?
கண்டிக்காதது ஏன்?: பொன்ராஜ் விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தைகள் தவறு, ஆனால் தனது ரசிகைகளும் தவெக பெண் ஆதரவாளர்களும் தன் மீது இருக்கும் அன்பினால் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரோ அல்லது அவரது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களோ கண்டித்து, அறிவுரை கூறாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நெட்டிசன்களின் இப்படியான கேள்விகள் இணையத்தில் பரவலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











