நீங்க எல்லாம் ஒரு அப்பா, அம்மாவா?: விஷால் தம்பி, நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்
பெங்களூர்: நடிகை ராதிகா பண்டிட் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்த நெட்டிசன்கள் அவரையும், நடிகர் யஷையும் விளாசியுள்ளனர்.
கன்னட நடிகர் யஷ், நடிகை ராதிகா பண்டிட்டுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அய்ரா என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில் ராதிகா பண்டிட் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்று யஷ் சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
அய்ரா யஷ்
யஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரின் 6 மாத குழந்தையான அய்ரா தனக்கு தம்பியோ, தங்கச்சி பாப்பாவோ பிறக்கப் போவதை தெரிவிப்பது போன்று உள்ளது. அதிலும் குறிப்பாக அப்பா ரொம்ப ஸ்பீடு என்று குட்டிப் பாப்பா சொல்வது போன்று இருப்பதை பார்த்து ரசிகர்கள் முகம் சுளித்துள்ளனர்.
யஷ்
யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். படம் சக்கை போடு போட்டது. ஒரு கன்னட படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றது இல்லை. இந்நிலையில் கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் இரண்டாம் பாகம் வரும் நிலையில் யஷ் வீட்டிலும் இரண்டாவது குழந்தை வருகிறது. அதை அவரே ஒய்.ஜி.எப். 2 என்று கூறியிருப்பது பலருக்கும் பிடிக்கவில்லை.
குழந்தை
யஷ், ராதிகா பண்டிட் சேர்ந்து நடித்த படம் ஒன்றில் ஆண்டுக்கு ஒரு பாப்பா பெற்றுக் கொடுக்குமாறு பாடினார். படத்தில் பாடியதை அவர் நிஜத்தில் செய்வதாகக் கூறி சிரிக்கிறார்கள். மேலும் ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் இடைவெளி வேண்டும். ஆனால் ராதிகா அதற்குள் மீண்டும் கர்ப்பமாகிவிட்டார். இதனால் அவரின் உடல்நலம் பாதிக்காதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கர்ப்பம்
ராதிகா பண்டிட், நீங்கள் எல்லாம் ஒரு அம்மாவா? எந்த ஒரு அம்மாவும் முதல் குழந்தை பிறந்த கையோடு மீண்டும் கர்ப்பம் ஆக மாட்டார். நீங்களும், யஷும் அய்ராவை பற்றி யோசிக்கவே இல்லையா? . நீங்கள் இருவரும் படித்தவர்கள் என்று நினைத்தால் இப்படி நடந்து கொள்கிறீர்களே. இருப்பினும் வாழ்த்துக்கள். இரண்டாவது குழந்தைக்கும் அய்ராவின் கதி ஏற்படுமா என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் விளாசியுள்ளனர். எப்பொழுது பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரவர் இஷ்டம். இந்நிலையில் நெட்டிசன்கள் இப்படி திட்டுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











