கடவுள் இருக்கானா குமாரு.. ஆரி சேவ் ஆனதும் கிண்டலாக பேசிய அர்ச்சனா.. இந்நேரம் தெரிஞ்சிருக்கும்!

சென்னை: சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஆரியை சேவ் பண்ணதும், கடவுள் இருக்கானா குமாரு என அர்ச்சனா நக்கலடித்ததை பார்த்த ரசிகர்கள், இந்நேரம் வீட்டுக்கு போயுள்ள அர்ச்சனாவுக்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கும் என வெளுத்து வருகின்றனர்.

கமல் சாரே என்ன கொஞ்சம் பேச விடுங்க என கெஞ்சும் அளவுக்கு அர்ச்சனாவின் டாமினேஷன் ரொம்ப ஓவர்.

அவரது ஓவர் ஆக்டிங்கிற்காகவே அவரை வெளியே அனுப்பியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆரி பேசினாலே தப்பு

ஆரி பேசினாலே தப்பு

ஆரி என்ன சொல்ல வருகிறார் என்பதையே காது கொடுத்து கேட்காமல், ஆரி பேசினாலே தப்பு, அவர் மத்தவங்களை தப்பா சொல்ல வருகிறார் என நினைத்து முந்திக் கொண்டு அவர் மீது குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் முன் வைத்து வருவது அன்ஃபேர்.

சிங்கிள் சிங்கம்

சிங்கிள் சிங்கம்

மொத்த ஹவுஸ்மேட்களும் தனக்கு எதிராக கருத்துக்களை அடுக்கி வைப்பதனால், கோபப்படும் ஆரி அவசரப்பட்டு பேசும் சில வார்த்தைகளை அவருக்கு எதிராக ஹவுஸ்மேட்கள் பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது. ஒட்டுமொத்த நரிக்கூட்டத்துக்கு நடுவே சிங்கிள் சிங்கமாக ஆரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆரி சேவ்

ஆரி சேவ்

சனிக்கிழமை எபிசோடில் முதல் ஆளாக ரியோவை சேவ் பண்ண கமல் அடுத்ததாக ஆரியை காப்பாற்றப்பட்டீர் என கைதட்டி ஆரியின் ஸ்டைலிலேயே அவரை அறிவித்து, நேர்மை வெல்லும் என்று கிளம்பினார். அர்ச்சனாவால் அதனை கொஞ்சம் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அர்ஜென்ட்டோ

அர்ஜென்ட்டோ

கமல் பேசி முடித்ததும் ஆண் போட்டியாளர்கள் எழுந்து நகர்வதை விட அதி வேகமாக அர்ச்சனா எங்கே கிளப்பி போகிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவ்வளவு அர்ஜென்ட்டோ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஆக்சுவலா கமல் பேசுவதில் கொஞ்சம் கூட அர்ச்சனாவுக்கு உடன்பாடு இல்லை என்பதை வார வாரம் அவரது முக பாவனைகளால் காட்டி வருகிறார்.

கடவுள் இருக்கானா குமாரு

கடவுள் இருக்கானா குமாரு

அர்ச்சனாவின் அட்டகாசம் எல்லை மீறியதாக இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கமல் பேசி விட்டு சென்ற பிறகு, பாலா, ரம்யா, ஷிவானியிடம் கடவுள் இருக்கானா குமாரு என அவங்க கேட்ட தொனி ஆரியை சேவ் பண்ணதுக்காகத்தான் என்பது புரிகிறது.

இந்நேரம் புரிந்திருக்கும்

இந்நேரம் புரிந்திருக்கும்

இவ்வளவு கேவலாக இருப்பதால் தான் நீங்க இந்த வாரம் வெளியே போனீங்க என்றும் கடவுள் இருக்கிறார் என்பது அர்ச்சனாவுக்கு இந்நேரம் புரிந்திருக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் அர்ச்சனாவை வச்சு விளாசி வருகின்றனர். அன்பு ஜெயிக்கும் என ஏமாற்றிய அர்ச்சனாவை ஆரி தனது நேர்மையால் இந்த வாரம் ஜெயித்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X