இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் குரூபிசம் முளைக்க காரணமாக இருந்து ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் கெடுத்ததே அர்ச்சனா தான் என நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. டைட்டில் வின்னர் யார் என்பது கிராண்ட் ஃபினாலேவில் தெரிய போகிறது.
6 மணி நேர பிரம்மாண்ட நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள், என்ன இருக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ரியல் ஃபன்
ரியோ ராஜ், நிஷா ஆரம்பத்தில் செம ஃபன் பண்ணிட்டு இருந்தனர். அதுதான் ரியல் ஃபன்னாக இருந்தது. சுரேஷ் சக்கரவர்த்தி செய்த சேட்டைகளும், அட்டகாசங்களும் சொல்லியே கொளுத்திப் போட்ட விதமும் ரசிக்க வைத்தது. இந்த சீசனில் சாண்டி மாஸ்டர் போல ரியோ இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அர்ச்சனா வந்தபிறகு
ஆனால், அர்ச்சனா வந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போக்கே மாறிப் போனது. பிக் பாஸ் வீட்டில் அன்பு என்கிற பெயரில் ஒரு கேங்கை உருவாக்கி ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், சோமசேகர் மற்றும் கேபி அதில் ஐக்கியமாக்கினார் அர்ச்சனா. பிக் பாஸ் வீட்டில் குரூபிசம் இருக்கு என பாலாவும் ஆரியும் போர்க்கொடி தூக்கிய இடத்திலேயே ரியல் ஃபன் உடைந்து போனது.
அவருக்கான ஸ்ட்ராட்டஜி
அன்பு கேங்கை உருவாக்கியதே எவிக்ஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மட்டும் தான் என்றும், அதை புரிந்து கொள்ளாமல் அர்ச்சனாவின் வலையில் மற்ற போட்டியாளர்கள் விழுந்ததே இந்த சீசன் ரொம்பவே போரடிக்க காரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

திருந்தவே இல்லை
பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தான் அர்ச்சனா அப்படி செய்தார். வீட்டை விட்டு வெளியே போன பிறகு எல்லாம் தெரிந்து இருக்குமே.. மீண்டும் வரும் போதாவது அனிதா, சனம் ஷெட்டி, ஆஜீத், சுரேஷ் தாத்தா மற்றும் ஷிவானி போல இயல்பாக பேசவில்லை என்றும் எங்கேயும் திருந்தி மன்னிப்பே கேட்கவில்லை என்றும் விளாசி வருகின்றனர்.

சொந்த புத்தி
என்னதான் அர்ச்சனா பிக் பாஸ் கேமையே கெடுத்தார் என்று சொன்னாலும், மத்தவங்களுக்கு சொந்த புத்தி இல்லையா? ஏன் சிந்திக்கவில்லை. எல்லோரும் அதை தங்களுக்கான ஆயுதமாகவும் ஆதாயமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என அர்ச்சனாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











