வாழ்க்கை ஒரு வட்டம் ஆனா நீ ரொம்ப.. தத்துவம் சொன்ன பாலாஜி முருகதாஸை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: வாழ்க்கை ஒரு வட்டம் என தத்துவம் சொன்ன பாலாஜி முருகதாஸை நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் செய்து கதறவிட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்களை போட்டு வருகிறார் பாலாஜி முருகதாஸ்.
காதலர் தினத்தை முன்னிட்டு, தனக்கு காதலியே இல்லை முரட்டு சிங்கிள் டே தான் கொண்டாட போகிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.

வாழ்க்கை ஒரு வட்டம்
"வாழ்க்கை ஒரு வட்டம் அதுக்கு எதுக்கு டா திட்டம்? போற போக்கில் போவோம்" என திடீர்னு ஒரு தத்துவ ட்வீட்டை பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் ரன்னர் அப்பான பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டுக்கு கீழே அவரை ஆதரித்தும் கலாய்த்தும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

குழந்தை பாலா
பாலாவுக்கு குழந்தைன்னு சொன்னா புடிக்காது. ஆனால், நிஜமாவே பாலா ஒரு அழகான இதயம் கொண்ட குழந்தை தான் என ரசிகை ஒருவர் பாலாவை ஆதரித்து கமெண்ட் செய்துள்ளார். மேலும், பாலா ஸ்வாக், எப்போதுமே பாலா டா.. க்யூட், க்யூட், க்யூட் என்றும் கொஞ்சியுள்ளார்.

நீங்க சொன்னா ரைட்டு
நீங்க சொன்னா அது ரைட்டு.. என கமெண்ட் போட்டுவிட்டு அதற்கு போட்டோ மீமாக வடிவேலுவின் தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை என்பதை போட்டுள்ளார் இந்த ரசிகர். இவர் பாலாவை கலாய்க்கிறாரா? இல்லை ஆதரிக்கிறாரா என்பதே புரியவில்லை.

நீ ரொம்ப மட்டம்
பாலாஜி முருகதாஸின் ஹேட்டர்கள் அவர் ட்வீட் போட்டாலே வரிசைக் கட்டிக் கொண்டு வம்பு செய்ய வந்து விடுகின்றனர். இந்த ட்வீட்டுக்கும் கீழே கெட்ட வார்த்தைகளால் திட்டி ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நெட்டிசன், பாலாவின் தத்துவத்தை வைத்தே, வாழ்க்கை ஒரு வட்டம், ஆனா நீ ரொம்ப மட்டம் என போட்டு கலாய்த்துள்ளார்.

விவசாயம் எப்போ
பிக் பாஸ் வீட்டில் ஆரி அண்ணனிடம் இருந்து விவசாயத்தை கற்றுக் கொண்டேன், சொந்த ஊருக்கு சென்று விவசாயம் பண்ண போறேன்னு பாலாஜி முருகதாஸ் சொல்லி இருந்தார். பாலா எப்போ ட்வீட் போட்டாலும் அதை விடாமல் ஏகப்பட்ட நெட்டிசன்கள் குறிப்பிட்டு கேட்டு பாலாவை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











