என்ன சோன முத்தா போச்சா.. பாலாவை நல்லா வெளுத்து வாங்கும் பிக் பாஸ் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் சம்யுக்தா அழுது ஒப்பாரி வைக்கும் போது, அதை விட பெரிய ஒப்பாரியாக பயில்வான் என்னை எல்லாரும் கார்னர் பண்றாங்க என பேசியதை பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட மூன்று பேர் யார் என கேட்டதற்கு, பலரும் சோமசேகர், ஆரி மற்றும் நிஷாவின் பெயர்களை கூறினர்.
ரம்யா பாண்டியனும், ரியோ ராஜும் சிறப்பாக ஒவ்வொரு முறையும் வாதாடியதை ஏன் தான் பலரும் மறந்து விட்டார்கள் என்றே தெரியவில்லை.

நல்லவனுக்கு நல்லதே நடக்கும்
சம்யுக்தாவுக்கும் ஆரிக்கும் இடையே நடந்த சண்டையிலும் சரி, ஆரிக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் இடையே நடந்த சண்டையிலும் சரி.. நடிகர் ஆரிக்கு யாருமே பெருசா சப்போர்ட் பண்ணல, ஆனால், தொடர்ந்து அவரது வாதத்தை அவருக்காகவே அவர் வைத்து விளையாடியதை பார்த்த ரசிகர்கள் நல்லவனுக்கு ஒரு நாள் நல்லதாய் விடியும் என பாராட்டி உள்ளனர்.

யாரும் ஆப்பு வைக்க வேண்டாம்
"பாலா உனக்கு யாரும் ஆப்பு வைக்க வேண்டாம்.. நீயே உனக்கு வைச்சுகிட்ட.. எங்கப்பா சம்யுக்தாவ காணோம்.. தலைவர் பதவிக்கு தகுதியில்லாத ஆள்" என இந்த நெட்டிசன் சந்தானம் பட மீமை எல்லாம் போட்டு பங்கமாக கலாய்த்துள்ளார். பாலாஜி புரமோவில் தன்னை எல்லாரும் கார்னர் பண்றாங்க என்று சொன்னது தான் இத்தனைக்கும் காரணம்.

குள்ளநரி கூட்டம்
பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா அண்ட் கோ தான் குரூபிசம் பண்றாங்கன்னு பாலா பெருசா கம்ப்ளைண்ட் பண்ணாரு, ஆனால், அர்ச்சனா சொல்லும் 'உஷ்'க்கும் அவங்களுக்கு இருக்கும் அக்கறையையும் பாசத்தையும் இந்த வாரம் ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள். தனியாக சம்யுக்தாவை தலைவியாக்கி ஒரு குள்ளநரி கூட்டத்தை பாலா உருவாக்கி வைத்திருப்பதையும் ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

அடுத்த வாரம் என்ன பண்ணலாம்
தனுஷின் அசுரன் படத்தின் வைரல் டெம்பிளேட்டை போட்டு, நீ இந்த வாரம் நடந்ததை பத்தி யோசிக்கிற, நான் அடுத்த வாரம் எப்படி என் பொழப்பை ஓட்டுறதுன்னு யோசிக்கிறேன் என பாலாஜி முருகதாஸ், சம்யுக்தாவை பார்த்து சொல்வது போல பங்கமாக போட்டு கலாய்த்துள்ளனர்.

மாஸ்டர் பிளான்
நேற்றைய எபிசோடில் நடிகர் ரியோ ராஜ், நிஷாவுக்கு எதிராக வழக்குப் போட்டு சுசித்ராவை காலி பண்ண சம்பவத்தை குறிப்பிட்டு, போக்கிரி பட மாஸ்டர் பிளான் மீமை இந்த ரசிகர் போட்டு ரியோ ராஜையும், நிஷாவையும் பாராட்டி உள்ளார்.

கார்னரா அய்யோ
சம்யுக்தாவையும், பாலாவையும் இந்த புரமோவில் பார்த்து ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி சிரிச்சிட்டு வராங்க, அதிலும் பாலா தன்னை எல்லாரும் சேர்ந்து கார்னர் செய்றாங்கன்னு சொன்னதை கேட்டதும், "என்னது பாலா கார்னர் செய்யப்படுகிறாரா" என நேசமணி போட்டோவை போட்டு பதறி துடிப்பது போல மரண சம்பவம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











