எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்.. எவிக்ஷன் வரிசை.. அப்புறம் எதுக்கு மக்கள் ஓட்டு.. கடுப்பான ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் நியூ நார்மல், நியூ நார்மல் என்று சொல்லி கேமையும் அவங்க இஷ்டத்துக்கு ஆடிக்கிறாங்க.

Recommended Video

Bigg Boss Day 18 Highlights • அர்ச்சனா Second பிக் பாஸ் போல? | Bigg Boss 4 Tamil

ஏற்கனவே இந்த இந்த போட்டியாளர்கள் இத்தனை நாட்கள் தான் வீட்டில் இருக்க வேண்டும் என முடிவு செய்து வைத்து விட்டே இந்த ஷோ ரியாலிட்டியே இல்லாமல் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இன்றைய புரமோ வீடியோக்கள் அதையே மீண்டும் ஒரு முறை கன்ஃபார்ம் செய்யும் விதமாக இருப்பதால், ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் என்கிற ஒரு அலாவுதீன் பூதத்தை கொண்டு வந்து மக்கள் ஓட்டுப் போடாமல் ஒரு நபரை வெளியே அனுப்பினாலும், அவர் கையில இந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தால், பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கலாம் என சரியான மோசடி வேலையை பிக் பாஸ் உருவாக்கி வைத்து விட்டார்.

எவிக்‌ஷன் லிஸ்ட்

எவிக்‌ஷன் லிஸ்ட்

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் பார்த்தே கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள், இன்றைய முதல் புரமோவை பார்த்து மேலும், டென்ஷனாகி உள்ளனர். அதாவது, எவிக்‌ஷன் லிஸ்ட் கேம் என்ற முறையில், யார் யார் எந்த வரிசையில் வெளியேற வேண்டும் என்பதையே ஹவுஸ்மேட்களே முடிவு செய்யும் விதமாக ஒரு போட்டி நடக்கிறது.

தாத்தா டாட்டா காட்டிடுவார் போல

தாத்தா டாட்டா காட்டிடுவார் போல

ஏற்கனவே சனம் ஷெட்டி மரியாதை குறைவாக திட்டியது தாங்க முடியாமல், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என சொன்ன சுரேஷ் தாத்தா, 16வது இடத்தில் தானாகவே போய் முதல் ஆளாக வெளியேற துடித்துக் கொண்டு நிற்கும் புரமோவை பார்த்ததும் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

வெற்றியாளர் யார்

வெற்றியாளர் யார்

ரம்யா ரொம்ப ஸ்ட்ராங் பிளேயர் என நம்ம மொட்டை பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியே சொல்வதால், நம்பர் ஒன் இடம் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்குமா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கேபி, ஷிவானி எல்லாம் ரொம்ப நாள் இந்த வீட்டில் இருப்பாங்களோ என்கிற சந்தேகத்தையும் இந்த புரமோ எழுப்பி இருக்கிறது.

அப்புறம் எதுக்கு மக்கள் ஓட்டு

அப்புறம் எதுக்கு மக்கள் ஓட்டு

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு ஹிட் ஆக காரணமே, அந்த நிகழ்ச்சியில் ஒழுங்கா விளையாடாத போட்டியாளர்களை மக்கள் ஓட்டு போடாமல் வெளியேற்ற முடியும். நல்ல பிளேயர்களை ஓட்டுப் போட்டு காப்பாற்ற முடியும் என்பதால் தான். ஆனால், இந்த சீசனில் எல்லாமே செட்டப்பாக இருப்பதால், பாலாஜி சொல்வது போல ஒரு தலை பட்சமாக இருக்கிறதே என மக்கள் ரொம்பவே காண்டாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X