For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புருஷன் செத்து ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி டாப்லெஸ் போஸ் கேக்குதா.. விளாசும் நெட்டிசன்ஸ்

    |

    இங்கிலாந்து: 55வயதான பிரபல ஹாலிவுட் நடிகை டாப்லெஸ் போஸ் கொடுத்து கிறங்கடித்து வருகிறார்.

    'மம்மி' பட நடிகர் பிரண்டன் ஃபேஸரின் Bedazzled படத்தில் டெவிலாக வருவாரே, அவர் தான் இந்த வயசிலும், இப்படி ஹாட்டாகவும் அழகாகவும் இருக்கும் எலிசபெத் ஹர்லே.

    கடந்த மாதம் இவரது முன்னாள் கணவன் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த நிலையில், ஒரே மாதத்தில் இப்படி ஜாலியா போஸ் போட்டுருக்கீங்களே என நெட்டிசன்கள் இவரை விளாசி வருகின்றனர்.

    உலகளவில் பிரபலம்

    உலகளவில் பிரபலம்

    1987ம் ஆண்டு வெளியான Aria எனும் ஹாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எலிசபெத் ஹர்லே. 2000ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் பிரண்டன் ஃபேஸருடன் இவர் இணைந்து நடித்த Bedazzled படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் டெவிலாக நடித்து கவர்ச்சியில் கலக்கி இருப்பார் எலிசபெத்.

    இந்தியருடன் திருமணம்

    இந்தியருடன் திருமணம்

    2007ம் ஆண்டு இந்திய தொழிலதிபர் அருண் நாயரை திருமணம் செய்து கொண்ட இவர், 2011ம் ஆண்டு மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்னதாகவே ஹாலிவுட் தயாரிப்பாளரான ஸ்டீவ் பிங்குடன் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் டேமியன் எனும் 18 வயது மகன் இருக்கிறார்.

    மாடியில் இருந்து குதித்து

    மாடியில் இருந்து குதித்து

    கடந்த மாதம் ஜூன் 22ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார் இவரது முன்னாள் கணவர் ஸ்டீவ் பிங். அவரது இறப்பை அறிந்த எலிசபெத் மிகவும் வருத்தத்துடன் சில போஸ்ட்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

    டாப்லெஸ் போஸ்

    டாப்லெஸ் போஸ்

    இந்நிலையில், முன்னாள் கணவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் கடந்த சனிக்கிழமை, 55 வயதாகும் இந்த பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத், தனது தோட்டத்தில் படு ஜாலியாக, டாப்லெஸ்ஸாக வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, அதை பட்டன் போடாமல் திறந்து விட்டு போஸ் கொடுத்து வைரலாக்கினார். ஆனால், அவரது இந்த போஸ்ட்டை பார்த்த பல நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து கமெண்ட் செய்துள்ளனர்.

    பிறந்த மேனியாக

    பிறந்த மேனியாக

    கடந்த மாதம் ஜூன் 10ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை எலிசபெத், பிறந்த மேனியாக, ஆடை ஏதும் அணியாமல், பாத் டப்பில் முழு நிர்வாணமாக குளிக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகன் மற்றும் தனது 80 வயது அம்மாவுக்கும் லாக்டவுன் பிறந்தநாளை தான் கொண்டாடி வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    English summary
    Elizabeth Hurley posted a steamy topless photo of herself as she enjoys her time quarantining in the English countryside.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X