விவசாயிகள் அல்ல தீவிரவாதிகள்.. முட்டாள் ரிஹானா.. ட்வீட் போட்ட கங்கனாவை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: இன்னும் நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் பற்றி பேச மறுக்கிறோம் என ட்வீட் போட்டு சர்வதேச அளவில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் அமெரிக்க பாடகி ரிஹானா.
ஆனால், அவர்கள் விவசாயிகளே அல்ல, தீவிரவாதிகள் என்றும் முட்டாளே உனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது எனக் கூறிய பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக உலகளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
ரிஹானேவை தொடர்ந்து கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இரண்டு மாதங்களாக
மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்கிற அச்சத்தால், கடந்த இரு மாதங்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அறவழியில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் உச்சகட்டமாக குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில், விவசாயிகள் போராட்டம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிஹானா ஆதரவு
பிரபல அமெரிக்க பாடகியான ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகள் போராட்டம் குறித்து, நாம் ஏன் எதுவும் பேச மறுக்கிறோம்" என ட்வீட் போட்டு சர்வதேச கவனத்தையும் விவசாயிகளுக்கு ஆதரவான தனது குரலையும் உரக்க பதிவு செய்துள்ளார். ரிஹானாவின் ட்வீட்டை தொடர்ந்து அவரது ரசிகர்களும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
சும்மா இரு முட்டாளே
யாருமே ஏன் பேசவில்லை என்றால், அவர்கள் விவசாயிகளே அல்ல, அவர்கள் தீவிரவாதிகள், இந்தியாவை பிரிக்கும் வேலையை செய்கின்றனர். சும்மா இரு முட்டாளே, உன்னை போல நாங்கள் எங்கள் தேசத்தை யாருக்கும் விற்கமாட்டோம் என ரிஹானாவை மொத்தமாக விளாசி ட்வீட் போட்டுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.
தீவிரவாதிகளா அவர்கள்
புதிய வேளான் திட்டத்திற்கு எதிராக போராடும் அனைவரும் விவசாயிகள் அல்ல தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டிய நிலையில், கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர். தீவிரவாதிகளா அவர்கள், விவசாயிகள் இல்லை என்றால், நீங்கள் உணவு உண்டு உயிர் வாழ முடியாது என திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பைத்தியக்காரி
இதற்கு முன் பாலிவுட் பிரபலங்கள் மொத்த பேரையும் போதைக்கு அடிமையானவர்கள் என சீண்டிய கங்கனா ரனாவத் தற்போது விவசாயிகளை தீவிரவாதிகள் எனக் கூறியுள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக சர்வதேச அளவில் ரிஹானா, கிரெட்டா தன்பர்க், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வரும் நிலையில், கங்கனா இப்படி பேசியிருப்பதை கண்டிக்கிறோம், அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷங்களும் எழுந்து வருகின்றன.
புறக்கணிக்க வேண்டும்
இதற்கு முன் பாலிவு பிரபலங்கள் மொத்த பேரையும் போதைக்கு அடிமையானவர்கள் என சீண்டிய கங்கனா ரனாவத் தற்போது விவசாயிகளை தீவிரவாதிகள் எனக் கூறியுள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக சர்வதேச அளவில் ரிஹானா, கிரெட்டா தன்பர்க், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வரும் நிலையில், கங்கனா இப்படி பேசியிருப்பதை கண்டிக்கிறோம், அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷங்களும் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











