Spoiler Alert: பெண்குயின் படம் காப்பியா? இந்த 2 படங்களில் இருந்து பல காட்சிகள் அப்படியே இருக்கிறதே?
சென்னை: கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படம் காப்பி படம் என்ற சர்ச்சையை சமூக வலைதள ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
நேரடியாக ஆன்லைனில் இன்று வெளியாகி உள்ள பெண்குயின் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கிய இந்த படத்தின் கிளைமேக்ஸ் தெலுங்கு திரைப்படமான 'ஹிட்' படத்தின் காப்பி என்றும், இடைவேளை காட்சி மலையாள படமான 'ஃபாரன்சிக்' படத்தின் காப்பி என்றும் கூறி வருகின்றனர்.

கீர்த்தி மட்டுமே
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்தின் விமர்சனங்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. திரைக்கதை பலவீனமாக இருந்தாலும், கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பால் தாங்கி பிடித்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

கிளைமேக்ஸ் காப்பி
சைக்கோ த்ரில்லர் படமான இந்த பெண்குயின் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தெலுங்கில் லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான ‘HIT' படத்தில் இருந்து அப்பட்டமாக அப்படியே எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெளியான அந்த படம் காப் ஸ்டோரியாக வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டொவினோ தாமஸ் படம்
மேலும், சிலர் இந்த படத்தின் இடைவேளை காட்சி கூட டொவினோ தாமஸ் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான Forensic படத்தில் இருந்து சுடப்பட்டு இருப்பதாகவும் சில ரசிகர்கள் விளாசி தள்ளி வருகிறார்கள். ஏற்கனவே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், காப்பி பிரச்சனையும் இப்ப கூடவே தலை தூக்கி இருக்கிறது.

வித்யாபாலன் படம்
கர்ப்பிணிப் பெண்ணாக நடிகை கீர்த்தி சுரேஷ் பெண்குயின் படத்தில் நடித்துள்ளார். அந்த காட்சியை வித்யா பாலன் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் படமான கஹானி படத்துடன் ஒப்பிட்டும், த்ரில்லர் காட்சிகள் சமந்தா, நாகார்ஜுனா நடிப்பில் வெளியான 'ராஜுகாரி காதி 3' படத்தில் இருந்தும் சில காட்சிகள் காப்பி செய்யப்பட்டுள்ளதாக டிவிட்டர் வாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இப்போ எடுக்கல
பெண்குயின் படத்தின் பல காட்சிகள் பல திரைப்படங்களில் இருந்து காப்பி செய்யப்பட்டு எடுக்கப்பட்டு இருப்பதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு, கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள், இந்த படம் ஃபாரன்ஸிக், ஹிட் படங்களை பார்த்து எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், அந்த படங்களின் ரிலீசுக்கு முன்பாகவே இதன் ஷூட்டிங் முடிந்து விட்டதாகவும் கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காகவே இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம் என்றும் ஆதரவு அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











