ஆரியை நோண்டுனா ஓட்டுக் கிடைக்குமா? இந்த வாரம் வெளியே போறது நீதான்மா.. நிஷாவை வெளுக்கும் ரசிகர்கள்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள், ஆரிக்கு எதிராக கொதித்தெழுந்த நெருப்பு நிஷாவை நீரூற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended Video

பாலாவை தெளிய வைத்த ஆரி, இனி ஆட்டம் ஆரம்பம் | Bb4 Day 64 Highlights | Oneindia Tamil

ரோபாவாக இருக்கும் ஜித்தன் ரமேஷுக்கு உணர்ச்சி வரும் படி பேச முயற்சித்து வரும் ஆரியை நிஷா வம்படியாக வந்து வெளுத்து வாங்குகிறார்.

ஆரியை எதிர்த்து நிஷா பேசியதும், இந்த வாரம் வெளியே போகப் போறது நீதான்மா என ஆரியின் ஆர்மியினர் முடிவே கட்டிவிட்டனர்.

ரொம்ப அநியாயம்

ரொம்ப அநியாயம்

"அநியாயம் நடந்தா தட்டிக் கேட்க சொன்னா.. இந்த நிஷாம்மா அநியாயம் பண்ணிட்டு அதட்டி கேட்குதே!... என்றும், "இன்னாமா நிஷா! இன்னைக்கு இப்படி பொங்குறீங்க.." என்றும் வரிசையாக நிஷாவை வச்சி விளாசி தள்ளி இருக்கிறார் இந்த பிக் பாஸ் ரசிகர்.

பூராமே ஜோக்கர்

பூராமே ஜோக்கர்

இந்த வாரம் எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் லிஸ்டில் கேபி, ஜித்தன் ரமேஷ், நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி மற்றும் சோமசேகர் உள்ளிட்டோர் உள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள், பூராமே ஜோக்கரா வந்தா என்ன பண்றது, அப்படியே மொத்தத்தையும் வெளியே அனுப்பிடுங்க என கலாய்த்து வருகின்றனர்.

ஆரம்பத்துல பண்ணியிருந்தா

ஆரம்பத்துல பண்ணியிருந்தா

#Balaji & #Aari அன்பு கூட்டணியை இந்த வாரம் வச்சி செய்ய போறானுங்க போல இருக்கு.. #Nisha நீ இந்த மாதிரி பேசுறதை எல்லாம் ஆர்மபத்துல இருந்து பண்ணி இருந்தா சிறப்பா இருந்து இருக்கும்.. #ramesh க்கு நீங்க பண்ணுறது எல்லாம் தப்பு அதைத்தான் ஆரி சொல்லுறாரு புரிஞ்சிக்க முயற்சி பண்ணு என நிஷாவை திட்டி வருகின்றனர்.

5 பைசா

5 பைசா

அடிக்கடி காக்கா வலிப்பு வந்த மாதிரி அர்ச்சனா அக்கா பண்ணும் ரியாக்‌ஷனை ரசிகர்கள் நல்லாவே நக்கலடித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா நடனமாடுவது இமிடேட் செய்து மீம் போட்டு, இன்னைக்குன்னு பார்த்து 5 பைசா கூட கொண்டு வரலையே என பங்கம் பண்ணி வருகின்றனர்.

நிஷா காலி

நிஷா காலி

ஆரி அர்ஜுனாவையே எதிர்த்து பேசுறீங்களா, நிஷா நீ இந்த வாரம் வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான்மா என்றும், 7 பேரில் ஒருத்தரை வெளியே அனுப்பினா உன்னைத் தான் வெளியே அனுப்புவாங்க, டபுள் எவிக்‌ஷன்னா உங்க ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி ஜித்தன் ரமேஷையும் சேர்த்து வெளியே அனுப்பிடுவாங்க என கமெண்ட் செக்‌ஷன் அனல் பறக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X