Don't Miss!
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- News
அதானி விவகாரம்.. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி சேமிப்புகளுக்கு பாதிப்பா.. வேல்முருகன் வைத்த முக்கிய டிமாண்ட்
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இதுக்கு பேரு தான் கூடவே இருந்து குழி பறிக்கிறது.. பாவனி மைண்ட் வாய்ஸை கேப்சர் பண்ணும் ரசிகாஸ்!
சென்னை: பாவனி காதல் கிசுகிசு பற்றி கமல் கேள்வி கேட்க நைஸா எஸ்கேப் ஆவது போல க்யூட்டா வருண் பற்றி பிரியங்கா பேசியது ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.
ராஜுவுக்கு முன்பாக இந்த விவகாரம் பற்றி கிசுகிசு பேசியதே பிரியங்கா தான் என கமல் ஒரே போடாக போட யூ டூ ப்ரூட்டஸ் என்பது போல பாவனி பார்த்து ரியாக்ஷன் பண்ண மைண்ட் வாய்ஸை கேப்சர் செய்து ரசிகர்கள் பிரியங்காவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
அபிஷேக் கூட இருந்து குழி பறித்தார் என அமீர் பிரியங்காவுக்கு சொல்வதை விட பாவனி கூடவே இருந்தது குழி பறித்தது பிரியங்கா தான் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பிரியங்கா முகத்திரை கிழிந்தது
பாவனியின் பர்சனல் விஷயத்தை எப்படி ராஜு நீ பேசலாம் என கிழி கிழியென கிழித்து வந்த பிரியங்காவின் முகத்திரையை ஒரே வார்த்தையில் கமல் டோட்டலாக கிழித்துத் தொங்கவிட்டு விட்டார் என பிக்பாஸ் ரசிகர்கள் கமல் சாரை பாராட்டி வருகின்றனர். இந்த கிசுகிசுவை பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்து வைத்ததே பிரியங்கா தான் என்பதை பாவனிக்கு புரியும் படி பேசி விட்டார்.

ஒரே மழுப்பல்
பாவனி யாரை காதலித்தால் உங்களுக்கு என்ன ராஜு? அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என வறுத்தெடுத்த கமல் பிரியங்காவின் பக்கம் தனது சாட்டையை சுழற்ற அவர் வேற லெவல் சமாளிஃபிகேஷன் செய்வது போல வருண் பற்றி பேச ஆரம்பித்து பலமாக நோஸ் கட் வாங்கி கொண்டார்.

தூண்டி விட்டது
அழுது கொண்டிருந்த பாவனியை நீ ஏன் ஓரமாய் போய் அழற நல்லா நாக்கை புடுங்குற மாதிரி ராஜுவை 4 வார்த்தை கேட்டுட்டு வா என உசுப்பேற்றி விட்டு சைலன்ட்டாக வேடிக்கை பார்த்தது பிரியங்கா தான் என்பதை அவர் மீது நல்ல நட்பை பாராட்டி வரும் ராஜுவுக்கு புரியும் படியும் கமல் போட்டுக் கொடுத்துள்ளார்.

பாவனி ரியாக்ஷன்
பிரியங்கா அபிஷேக்கிடமும் நிரூப் உடனும் பாவனி மற்றும் அபிநய் இடையே இருக்கும் உறவு குறித்து கிசுகிசு பேசினார் என கமல் சார் குறும்படமே போடாமல் வெளிப்படையாக உடைத்து சொன்ன போது பாவனி பண்ண ரியாக்ஷன் தான் வேற லெவல்.

மைண்ட் வாய்ஸ்
யூ டூ ப்ரூட்டஸ் என்றும் இதுக்கு பேரு தான் கூடவே இருந்து குழி பறிக்கிறது என்றும் தன்னுடைய ஆட்டத்துக்காக பாவனியை பிரியங்கா பகடையாக பயன்படுத்திக் கொண்டார் என நெட்டிசன்கள் பாவனியின் மைண்ட் வாய்ஸ் அந்த ரியாக்ஷனில் என்னவெல்லாம் சொல்லி இருக்கும் என கேட்ச் பண்ணி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வருண் அக்ஷரா
பிரியங்கா பாவனி அபிநய் பற்றி ஏன் பேசினீங்க என கமல் கேட்க அவரே தானாக வந்து வருண் அக்ஷரா இடையே ரொமாண்டிக் டிராக் ஓடுகிறதா என கிசுகிசு பேசியது பற்றியும் பேசியும் மாட்டிக் கொண்டார் என்றும் நெட்டிசன்கள் பிரியங்காவை வெளுத்து வாங்கி வருகின்றனர். அடுத்த வாரம் நிச்சயம் பிரியங்கா நாமினேஷனில் வருவார் என்பது கன்ஃபார்ம்.