சக்திமான் ஹீரோவுக்கு மூளை மழுங்கிடுச்சா.. பெண்களை இப்படி இழிவுப்படுத்தி பேசலாமா? குவிகிறது கண்டனம்

மும்பை: பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்தை பேசிய சக்திமான் ஹீரோ முகேஷ் கண்ணாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Recommended Video

Shaktimaanன் சர்ச்சை கருத்து! பெண்களை இழிவுப்படுத்திய Mukesh Khanna | OneIndia Tamil

90ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோவான முகேஷ் கண்ணா சக்திமான், மகாபாரதம் உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்.

மீ டூ விவகாரம் உருவாக காரணமே பெண்கள் தான் என தற்போது அவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சக்திமான்

சக்திமான்

1997ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சக்திமான் தொடரில் ஹீரோவாக நடித்து பிரபலமானார் நடிகர் முகேஷ் கண்ணா. இந்தியன் சூப்பர் ஹீரோவான சக்திமானை பிடிக்காத 90ஸ் கிட்ஸ் குழந்தைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்றும் அந்த கதாபாத்திரம் இந்திய ரசிகர்களின் ஃபேவரைட் ஒன்றாக இருக்கிறது.

முகேஷ் கண்ணா

முகேஷ் கண்ணா

சக்திமான் மட்டுமின்றி மகாபாரதம் தொடரில் பீஷ்மர் கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கியவர் முகேஷ் கண்ணா. அதுமட்டுமின்றி ஏகப்பட்ட டிவி தொடர்களிலும், பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 62 வயதாகும் முகேஷ் கண்ணா, விரைவில் சக்திமான் படம் உருவாகும் என பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்.

மீ டூ சர்ச்சை

ரசிகர்களின் விருப்பமான நடிகரான முகேஷ் கண்ணா, சமீபத்தில் கொடுத்த ஒரே ஒரு பேட்டியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார். பெண்கள் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு தான் மீ டூ சர்ச்சை உருவானது என்று அவர் பேசிய வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் நெட்டிசன்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் அல்ல

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் அல்ல

மேலும், அந்த பேட்டியில், பெண்கள் தங்களை ஆண்களுக்கு நிகரானவர்கள் என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால், தான் சமூகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடக்கின்றன. பெண்கள் ஒரு போதும் ஆண்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்பதை உணர வேண்டும் என்று பேசியதை பார்த்த நெட்டிசன்கள், மூளை மழுங்கி விட்டதா என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பிற்போக்குத் தனம்

பிற்போக்குத் தனம்

சக்திமான் கதாபாத்திரம் மீது தான் ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. சின்ன வயசுல இவர் சொன்ன அறிவுரை எல்லாம் கேட்டு வளர்ந்தோமே, இப்போ இவருக்கே அறிவு இல்லை என தெரிந்தது ரொம்பவே வருத்தமளிக்கிறது. பகுத்தறிவாளராக இருப்பார் என பார்த்தால், பிற்போக்குத் தனமானவராக இருக்கிறாரே முகேஷ் கண்ணா என்றும் கண்டனங்கள் குவிகின்றன.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

பெண்களுக்கு எதிராக இப்படியொரு சர்ச்சையான பேச்சை பேசிய சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா நிச்சயம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் ரசிகர்கள் வைத்து வருகின்றனர். மேலும், பாவம் முகேஷ் கண்ணா வீட்டுப் பெண்கள், இவரிடம் எப்படி சிக்கித் தவிக்கிறார்களோ என்றும் ஏளனமாக பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X